கோயிலில் சுமந்திரனின் சுவரொட்டி: 100 கோடி நட்டஈடு கோரி வழக்கு?

சைவசமயத்தை இழிவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற சுமந்திரனுக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

மறவன்புலவு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன.

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆலயத்தின் கருவறைக்குள் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்ததினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.