இராணுவ ஆட்சியை கூட்டமைப்பு எதிர்க்கின்றது என சுமந்திரன் கூறுவது நகைச்சுவையானது – சிவாஜி!

சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் வடமாகாண உறுப்பினருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருகோணமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் இராணுவ ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கிறது எனக் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. அவர் 16 விசேட அதிரடிப்படையினரையும், நான்கு அமைச்சர்களின் பாதுகாப்புப் படையினரையும் ஐந்து பீல்ட் பைக்குகளையும் வைத்துக்கொண்டு இராணுவ ஆட்சியை நடத்துகிறார். அப்படிச் செய்துகொண்டு, இராணுவ ஆட்சியை சுமந்திரன் எதிர்ப்பது நகைச்சுவையானது என்று கூறியுள்ளார் .