ஶ்ரீலங்கா அரசியல்வாதிகள் பங்குபெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி..காண தவறாதீர்கள்…

544

*கோத்தாபாய:*

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.

இப்படை தோற்கின் எப்படி வெல்லும்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை

நிச்சயம் உலகம் பாராட்டும்.

*மகிந்த:*

வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை

வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்,

*ரணில்:*

நான் ஒரு ராசியில்லா ராஜா என்வாசத்துகில்லை இதுவரை ரோஜா

ஆயிரம் பாடட்டும் மனது என் ஆசைக்கு இல்லை உறவு என்கதையை எழுதிவிட்டேன் முடிவினிலே சுபமில்லை இயன்றவரைவாழ்ந்துவிட்டேன் மனதினிலே சாந்தியில்லை

தோல்விதனை எழுதட்டும் வரலாறு

துணைக்கென்று இனிமேல் யார் கூறு..

*மாவை:*

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடைமையும் இழந்தோம் உரிமை இழக்கலாமா உணர்வைகொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

*சசிகலா ரவிராஜ்:*

ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்

உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி

ஞானம் பிறந்திரிச்சு நாலும் புரிஞ்சிரிச்சு கண்மணி என்கண்மணி ………….

பச்சை குழந்தைனு பாலூட்டி வளர்த்தேன்

பால குடிச்சுபுட்டு பாம்பாக கொத்துதடி கண்மணி கண்மணி

ஏது பந்த பாசம் எல்லாம் வெளிவேசம்

காசு பணம் வந்தால் நேசம் சில மாதம்

சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ .

வேப்பிலை கறி வேப்பிலை அது யாரோ நான் தானோ

என் வீட்டு கன்னு குட்டி என்னோட மல்லுகட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி

தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி என்கண்மணி

நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆளை கரை சேர்த்து ஆடும் இந்த தோணி

*பிரவீனா ரவிராஜ்*:

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அன்று

சிரிப்பவர் யார் அழுவது யார் தெரியும் அப்ப

நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா அதை

வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா

தருமத்தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா உண்மைதன்னை ஊமையாக்கி தலை குனிய வைப்பதா

தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்பதோ அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ நானொரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனை அல்ல புலிதான் என்று போக போக காட்டுகிறேன்

*அங்கஜன்:*

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா

கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்பவும் நான் ராஜா

சம்பந்தன்: (ஆழ்ந்த நித்திரையில்)

*விக்கி:* தூங்காதே தம்பி தூங்காதே தூங்கிபுட்டு பின்னாடி ஏங்காதே

*சம்பந்தன்:* (தூக்கத்தில் இருந்து எழும்பி)

கோணமலை எங்கள் கோட்டை திருக்கோணமலை எங்கள் கோட்டை கொடுப்போமோ எவன் கையிலும் இந்த நாட்டை

*கோத்தா:* இது தடை செய்யப்பட்ட பாட்டு. இதனை நீங்கள் இங்கு பாட முடியாது.

*மாவை:* (கோபத்துடன்) என்ன அநியாயம் இது. தட்டி கேட்க யாருமில்லையா? அப்ப சம்பந்தர் என்ன தோடுடைய செவியனா பாடுறது?

*ரணில்:* (தன்பாட்டில் முணுமுணுக்கிறார் ) நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்குஏழைகள் வேதனைப்படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்

*சஜித்:*

போடா போடா புண்ணாக்கு போடாதை தப்பு கணக்கு

தலைக்கிறுக்கு உனக்கு இருக்கு இப்ப எண்ணாதை மனக்கணக்கு

தலைக்கிறுக்கு உனக்கு இருக்கு இப்ப எண்ணாதை மனக்கணக்கு

போடா போடா புண்ணாக்கு போடாதை தப்பு கணக்கு

*டக்ளஸ்:*

தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று அதை நானுனக்கு சொல்லட்டுமா இன்று..

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்.

வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே தாங்கள்

வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகர சபையிலே.

*கஜேந்திரகுமார்:* தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

ஒற்றுமையாய் பகைவர்களை ஓடவைப்போம்

உழைப்பாலே நம் நாட்டை உயர்த்திவைப்போம்.

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

*சிவாஜிலிங்கம்:* நான் உப்பு விக்கபோனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது.

நான் பொரி விக்கபோனா பெரும் புயல்காற்று வீசுது

டே வேம்பு வாழ்க்கைனா மேடு பள்ளம் இருக்கத்தாண்டா செய்யும்

இதெல்லாம் சகஜம்தாண்டா

தேனான ஆறுதலை நீ கூறலாம் அட தேனான ஆறுதலை நீ கூறலாம் என் வாழ்க்கை இனி வீண்தான் இனி நான் கூறலாம்.

*பிள்ளையான்:* (கருணாவைப்பார்த்து) பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது. கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது.

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன்

நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்.

*கருணா*: நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்துவிடும்

கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காது என்பார் கிடைத்துவிடும்.

: இத்துடன் இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்சிகள் முடிவடைகின்றன. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மீண்டும் 5 வருடங்களின் பின்பு சிந்திப்போம்.

யாவும் கற்பனை அல்ல.

மூலம் – கானகன்