நாட்டு பற்றாளர் நடராஜா சுரேந்திரன் நினைவில்…

88

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார்.

திரு.நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ”புலிகளின் குரல்” என்று அழைக்கப்பட்டு பின்னர் ”உறுமல்” என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலைகைகளில், அன்றைய சமர்க்காலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்று கடமையாற்றியவர்.

இதேவேளை இவரது ஆங்கில புலமையையும், எழுத்தாற்றலையும், அறிந்த விடுதலைப் புலிகளின் ”படைத்துறைச் செயலகம்” முக்கியமான தந்திரோபாயங்களை தனது படையணிகளுக்கப் போதிக்கும் பொருட்டு ஆங்கில மொழி நூல்களை மொழிபெயர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர்.

பொறுப்பாளர்களான கேணல் ராஜு, காண்டீபன் ஆகியவர்களின் கீழ் கடமையாற்றிய இவர் 1997-2001 ஆண்டு காலப்பகுதியில் இயக்கப் போராளிகளுக்கு மொழி பெயர்க்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.

புதிய தமிழ் மொழிச் சொற்களை உருவாக்கும் பணியினையும் மேற்கொண்டிருந்தார். பல ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழாக்கத்திற்கு வழிவகுத்தவர். இவர் ”THE WILD GEESE” எனும் திரைப்படத்தில் குரல் கொடுத்துமிருந்தார்.

இறுதியாக சமர்க்கள ஆய்வுப் பணியகத்தில் யோகி என்ற அழைக்கப்படும் யோகரத்தினம் கீழ் பணிபுரிந்து வந்த நிலையில் நோய்வாய்பட்டிருந்தார். அவரின் மருத்துவ வசதி கருதியும், பாதுகாப்புக் கருதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்த அவரது குடும்பத்தினரின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போர் மீண்டும் ஆரம்பித்த போது, அங்கிருப்பது பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் இந்தியா சென்று அங்கேயே வசித்து வந்தார்.

உலகத்தமிழர்களின் சார்பில் புகழ்வணக்கம் உரித்தாகட்டும்.

நன்றி- voice