தமிழீழ தேசிய செயற்பாட்டாளார் ஒட்டோவா சுரேஷ் அண்ணா நினைவில்

87

பாதைகள் பலவானாலும் தேசியத்தை நேசித்தவர்களின் இழப்பு கொடியது

நேற்று ஒட்டாவா வாகன விபத்தில் தமிழீழ தேசியச் செயற்பாட்டாளர் சுரேஸ் பலி என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது!

“ஒட்டாவா சுரேஷ்” என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சுரேஷ் அவர்கள் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறவருமாவார்.

ஓட்டவா நகரில் உள்ள தமிழ் மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களையும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்து வந்தவர்

கணனி துறையில் சிறந்து விளங்கிய இவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார்.

ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) பொறுப்பாளராகவும், தாயக செயற்பாடுகளில் எண்பது (1980s) காலப்பகுதி முதல் 2009 வரை தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியவராவார்.

2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக Queens park முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவர்.

ஈழப்போராட்டத்தின் பதிவுகளை தனது கேமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியவர் சுரேஷ் அவர்கள்.

புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் படையணிகள் முதல், தேசியத்தலைவர் வரை புகைப்பட தொகுப்புகளை உருவாக்கியவராவார்.

ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற மாணவர்களை தாயகம் நோக்கிய செயல்பாடுகளில் உள்வாங்கி இன்றும் அவர்கள் சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக இருக்க சுரேஷின் பங்களிப்பு மிகப்பெரும் காரணமாகும்.

கடந்த பலவருடங்களாக ஒட்டாவாவில் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகின்ற அவரின் மறைவு பேரதிர்ச்சியே!

சுரேஷ் அவர்களுக்கு எமது கண்ணீர் வணக்கம்!

குடும்பத்தினர்க்கு
ஆழ்ந்த இரங்கல்கள்!