அண்மையில் தற்”கொலை” செய்து கொண்ட ஹிந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் செல்லமாக வளர்ந்து வந்த நாய்குட்டி அவரை காணாது சாப்பிடாமல் பட்டினி கிடப்பதாகவும் அடிக்கடி அவரின் அறை பக்கமாக சென்று அவரை தேடி பார்ப்பதாகவும் அவர் வீட்டில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.சுசாந் படத்தை மொபைலில் நாய்குட்டி பார்த்து கவலைபடும் நாய்குட்டி,இனி அவரின் செல்ல சுசாந் உயிருடன் வரபோவதில்லை என்று எப்படி தூய அன்பை மட்டுமே தெரிந்த அந்த ஜீவனுக்கு தெரியப்படுத்துவது? தோணி படம் மூலம் இந்திய உலக ரசிகர்களை கவனத்தை ஈர்த்த சுசந்த்,ஹிந்தி திரையுலகில் வேகமாக வளர்ந்து வந்த நடிகர் ஆவார்.யார் மறந்தாலும் நீ என்னை மறக்காமல் விட்டால் அதுவே எனக்கு போதும் என்று தனது செல்ல நாய்குட்டி பற்றி இறுதியாக ட்விட் பண்ணியிருந்தமை குறிப்பிடதக்கது.
இயற்கையில் நாய்கள் , மனிதர்களை விட அதிகமான உணர்வுகளை புரிந்து கொண்டு செயலாற்ற கூடிய ஒரு உயிரினங்கள்.இந்திய அணிதலைவர் தோணி ஒரு முறை அவரின் நாய்குட்டி பற்றி சொன்னது..தான் கிரிக்கெட்டில் எவ்வளவு வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்து வீட்டுக்கு போனாலும்,தன்னை ஒரே மாதிரியாக வரவேற்று உறவாடுவது தன்னுடைய செல்ல நாய்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.