4 ஆண்டுகால சுத்துமாத்துகள் – பகுதி 1

184

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் தேசிய அரசியலில் ஆயிரக்கணக்கான பொய்கள் பேசப்பட்டன . வடக்கில் ஒரு கதை , தெற்கில் இன்னுமொரு கதை என எரிச்சலூட்டும் கதைகள் புனையப்பட்டன

அதில் 2005 ஆம் ஆண்டு திரு ரணில் விக்கிரமசிங்கே வெளிப்படையாக சமஸ்டி வாக்குறுதி வழங்கி தேர்தலில் போட்டி இட்ட பொது தோற்கடிக்கப்பட்டார் என்கிற அவதூறும் ஒன்று

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் சமஸ்டி தொடர்பான எந்தவிதமான வாக்குறுதிகளையும் வழங்கி இருக்க வில்லை. குறிப்பாக 27/09/2005 ஆம் திகதி வெளியிடப்பட்ட திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் 40 பக்க தேர்தல் விஞ்ஞாபனத்தில் 2 பிரிவுகள் இருந்தன . முதல் பிரிவில் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு , பிரிவினைவாதம் ஒழிப்பு என மூன்று பகுதிகள் இருந்தன அதே நேரம் பிரிவு இரண்டில் சுனாமி மீள்கட்டமைப்பு , பெண்கள் உரிமை , வெளிவிவகார உட்பட்ட பகுதிகள் இருந்தன

குறிப்பாக திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகுறைப்பு ,வேலைவாய்ப்பு வழங்குதல் , வாழ்க்கை செலவு குறைப்பு , 5 மில்லியன் பெறுமதியான உணவு மானியம் , ஓராண்டில் 100000 தனியார்துறை அரச துறை வேலைவாய்ப்பு உருவாக்குதல் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டு இருந்தன

இனப்பிரச்சனை தொடர்பாக பிரிவு ஒன்றின் பகுதி மூன்றில் இவ்வாறு சொல்லப்பட்டு இருந்தது

“We will bring about a permanent resolution to the ethnic problem through a political solution based on a United Sri Lanka”

அதாவது ஐக்கிய இலங்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு மூலம் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வருவோம் என்று மட்டுமே சொல்லப்பட்டு இருந்தது .

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் திரு ரணில் விக்ரமசிங்கே தானும் தனது கட்சியும் ஒரு போதும் / எந்த காலத்திலும் சமஸ்டி அரசியல் அமைப்புக்கு தயாராக இருக்க வில்லை என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்

இந்த நிலையில் திரு சுமந்திரன் திரு ரணில் விக்ரமசிங்கே 2005 ஆம் ஆண்டு தேர்தலில் சமஸ்டி தீர்வை வெளிப்படையாக சொல்லி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் என்பது பச்சை பொய் . இந்த பொய்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் சாதித்தது என்ன ? சொந்த மக்களை பொய் சொல்லி ஏமாற்றி விட்டு அந்த மக்களிடமே வாக்கு கேட்டு தமிழ் தேசியத்தின் பேரில் போவது எல்லாம் வெறும் சுத்துமாத்துதனம்

நன்றி இனமொன்றின் குரல்