காயமடைந்த ஒரு மாட்டுக்காக ஹெலிகப்டர் அனுப்பிய சுவிஸ் அரசு!

233

சுவிட்ஸர்லாந்து காயமடைந்த மாடு ஒன்று ஹெலிகொப்டரின் மூலம் உயரமான பகுதியிலிருந்து எல்ப்ஸ் மலையின் தாழ்வான பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சுவிஸ் விவசாயிகள் தங்களது மாடுகளை உயர்வான பகுதிகளிலுள்ள எல்பஸ் தாழ்நிலப்பகுதிக்கு மாடுகளை ஓட்டிச்செல்கின்றனர்.அவ்வாறே, சுவிட்ஸர்லாந்தின் க்ளவுசென்பாஸ் மலைப்பகுதியிலிருந்து 1000 மாடுகளை தாழ்நிலப்பகுதிக்கு ஓட்டிச்சென்றனர்.

எனினும், ஒரு மாடு சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்ததால் அது ஹெலிகொப்டரின் மூலம் தாழ்நிலப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது.மாடுகளை கொண்டுசெல்வதற்கு இது இலகுவான வழி என்று திடீரென விலங்கு வானில் தூக்கிச் செல்லபடுவதால் அதற்கு இது அதிர்ச்சியாக இருக்கும் என இந்த மாடுகளை ஓட்டிச் செல்லும் விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளர்.

இவ்வாறு கொண்டுசெல்லப்படுவதால் விலங்குகள் மேலும் காயமடைவது தவிர்க்கப்படுகிறது.அத்துடன் காயமடைந்த பசுக்களை கொண்டுசெல்ல சுவிட்ஸர்லாந்தில் பொதுவாக இந்த முறைமை கையாளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிற்க..இங்கு சிறிலங்கா இந்தியாவில் இருப்பவர்கள்,விவசாயம் ஆடு மாடு மேய்பவதை அசிங்கமாக கருதுகிறார்கள்.அத்துடன் நல்ல உடை உடுத்தி வாகனங்களில் வேலைக்கு செல்வதை உயர்வாக கருதுகிறார்கள்.ஆனால் உண்மை வேலையில் மதிப்பு இல்லை.எல்லாம் நல்ல வேலைதான்.ஆனால் அந்த வேலைகள் செய்யப்படும் விதங்களில்தான் அது இருக்கின்றது.இங்கு விவசாயத்தை அசிங்கமகா பார்ப்பதால்,இவர்களின் அரசு விவசாயத்தை கவனிப்பதில்லை.சுவிஸ் போன்ற நாட்டு மக்கள் தாம் செய்யும் வேலைகளை பார்க்காமல்,வேலையை செய்யும் விதத்தை பார்ப்பதால்,அவர்களின் அரசு ஒரு மாட்டுக்காக ஹெலிகப்டர் அனுப்புகின்றது.ஆனால் இங்கு மனிதர்களை காப்பதற்கு கூட எதுவும் வர போவதில்லை.தவிர இறந்த பின்னர் கூட திரும்பி பார்க்காத அரசு ஒன்றே இங்கே இருக்கின்றது.சுருக்கமாக சொன்னால் மக்களுக்கு ஏற்ற அரசுகள்தான்,நீங்கள் அரசில் குறை சொல்ல முன்னர்,உங்களை நீங்களே ஒரு தடவை குறைபட்டுகொள்ளுங்கள்!