சுவிட்சர்லாந்தில் மேலும் சில மாகாணங்கள் முடக்கம்

64

சுவிட்சர்லாந்தில் மேலும் சில மாகாணங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. இன்று மாலை 5 மணி முதல் Vaud மாகாணத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மூடப்படுகின்றன.

Fribourg மாகாணம் இன்று இரவு 11 மணிக்கு முடக்கப்படுகிறது. இரண்டு மாகாணங்களிலுமே மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட உள்ளன.

யாருக்கெல்லாம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியுமோ அவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இந்த மாதம் முழுவதும் அமுலில் இருக்கும்.

Fribourgஇல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை பனிச்சறுக்கு மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Lucerne மாகாணத்தில், மருத்துவமனைகள் அத்தியாவசியமற்றவை என கருதப்படும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதை நிறுத்த உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, குறிப்பாக பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகள் மற்றும் Valaisமாகாணத்திற்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.