சுவிஸ் பாஸ்டரும் நல்லா இருந்த யாழ்ப்பாணமும்

88

‘பாஸ்டர்’ என்றால் ஏதோ பெரிய புடுங்கி என்ற நினைப்பு பல அல்லேலுயா சபைகளைச் சேர்ந்த மக்களுக்கு போல் சற்குணத்தின் சம்பவத்துக்குப் பின்னரும் தொடர்வதை அவதானிக்கிறேன்.

“நீங்கள் யாரை வேண்டுமானாலும் திட்டுங்கள் ஆனால் பாஸ்டர் பற்றி மட்டும் பேசாதீர்கள். அது பெரிய பாவம். இயேசப்பா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.” என்று சிலர் உள்ப்பெட்டியில் வியாக்கியானம் வைக்கிறார்கள்.

பாஸ்டர்மாரை யாரப்பா திட்டுறது? திட்டவேண்டிய அவசியம் என்ன? அந்த அவசிய இடைவெளியை தோற்றுவித்தது யார் சொல்லுங்கள்?

பாஸ்டர் சற்குணம் யாழ்ப்பாணத்துக்கு வந்தமையும் நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்தமையும் தற்செயலான ஒரு விபத்து என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக நடந்தவற்றை மறந்து அவரை மன்னிப்பதற்குக்கூட வடக்கு மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். காரணம் நோயை யாரும் வலிந்து வாங்குவதுமில்லை அடுத்தவனுக்கு பரப்ப எத்தனிப்பதுமில்லை. ஆகவே நடந்தவையை மறக்கலாம் மன்னிக்கலாம்.

ஆனால் இன்றுவரை வடக்கில் 19 தொற்றுக்குள்ளானோர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதன் ஆரம்ப கர்த்தா சற்குணத்தைவிட யாருமே இல்லை. கர்த்தாவும் அவர்தான் காரணியும் அவர்தான். இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாண குடாநாடு தொடர்ந்தும் ஆபத்தான கட்டத்திலேயே இருக்கிறது. இதன் விளைவுகளாக,

 1. அறிகுறிகளைத் தாண்டிய புதிய தொற்றுக்கள்.
 2. சிவனே என்றிருந்த பலர் சேர்ந்த குற்றத்துக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை.
 3. நோய்ப் பயம் குறித்த உளவியல் குழப்பங்கள்.
 4. தொடர் முடக்கங்களாலும் ஊரடங்காலும் வருமானமிழந்த குடும்பங்கள்.
 5. உரிய காலத்தில் கற்கவேண்டிய கல்வியை இழந்துநிற்கும் சகலதரப்பு மாணவர்கள்.
 6. வருமானத்தை நம்பி கடன்பெற்று முதலீடுசெய்த பலர், பல நிறுவனங்கள்.
 7. ஒருவேளை உணவுக்குத் தவிக்கும் அப்பாவி மக்கள்
 8. அதிகாரிகளின் மறைமுக சுரண்டல்களால் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் ஏழைகள்.
 9. தொடர் விடுமுறைகளால் முடங்கிப்போயுள்ள உரிய காலத்து அலுவலக வேலைகளை ஒரே நேரத்தில்செய்யப்போகும் உத்தியோகத்தர்கள்.
 10. ஆசையோடு செலவுசெய்து வளர்த்த காய்கறிகளை அரைவிலைக்கும் அழுகல் நிலைக்கும் தள்ளியுள்ள விவசாயிகள்.
 11. உறவுகளைப் பிரிந்து வேறு வேறு மாவட்டங்களில் சிக்கித்தவிக்கும் சாமானியர்கள்.நாள்குறித்து உறவுகளோடு மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டிய சடங்குகள் சம்பிரதாயங்களை பத்துப்பேருடன் அதாவது வீட்டுடன் கொண்டாடி முடிக்கும் மக்கள்.
 12. பெற்ற தந்தையின் முதல் துவசத்தைக்கூட பிறந்தவீட்டிற்குப் போய் அம்மா சகோதரங்களுடன் அனுட்டிக்க வழியின்றித் தவிக்கும் நான்… என்னைப்போல சிலர்?
 13. வகைப்படுத்தமுடியாத இன்னும் பல பாதிப்புக்கள்

இவ்வளவுக்கும் தெரிந்தோ தெரியாமலோ காரணியாகிவிட்டேன் என்ற எந்தவொரு குற்ற உணர்ச்சியுமே இல்லாமல் தனது வழமையான மதச் செயற்பாட்டைத் தொடங்கியுள்ள அந்த பாஸ்டர் எவ்வளவு பெரிய ஒரு இழிபிறப்பு என்பதை மனச்சாட்சி இருந்தால் சிந்தித்துப்பாருங்கள்.

இதன் பின்னரும் அந்த இழிகோல மனிதனுக்கு வக்காலத்து வாங்குவீர்களாயின் உங்கள்மீது கொண்டுள்ள அற்ப மரியாதையையும் விலக்கி உங்களையும் அவனில் ஒருவராக கணிப்பதைவிட வேறு வழியில்லை.

சுய அறிவும் மனச்சாட்சியுமிருந்தால் சிந்தித்துச் செயற்படுங்கள். அதைவிடுத்து பாவம், மயிர், மண்ணாங்கட்டியென்றெல்லாம் எடுபடாத மேட்டர்களை வைத்து மனுசர பயமுறுத்த எத்தனிக்காதீர்கள். ஏனெனில் எமக்கும் ஒரு மேலான பரம்பொருள் நம்பிக்கை இருக்கிறது. அதைமீறி எந்தவொரு வெருட்டல்களும் இங்கே கணக்கெடுக்கப்படாது.

Artist Shan