தமிழர் தாயகத்தில் கட்டியெழுப்ப வேண்டிய தற்சார்பியல் பொருளாதாரம்

108

வடக்கு கிழக்கை மாகாணங்களை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக வட மாகா­ணத்தின் வேலை­யின்மை வீத­மா­னது 7.7 வீத­மாக உள்­ளது. .கிழக்கு மாகா­ணத்தில் வேலை­யின்மை வீத­மா­னது 6 ஆக இருக்கிறது.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் அதி­க­ள­வான சிறு மற்றும் நடுத்தர முத­லீ­டு­களை செய்து பிராந்திய மக்களுக்கான தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்படுத்த முயற்சிபதன் மூலம் வேலைவாய்ப்பின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

1. வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயம் , விலங்கு வேளாண்மை , கடல்தொழில் , என்பன பிரதான தொழில்களாக இருக்கின்றன . இங்கே உற்பத்தி செய்யப்படுகிற பால் , மீன் , நெல் என்பன மூலப்பொருட்களாக வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன .இந்த பொருட்களை கொண்டு முடிவு பொருட்களை தயாரிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்ச்சாலைகளை வடக்கு கிழக்கில் உருவாக்க வேண்டும்

2. அரிசி ஆலைகள் , கடல் உணவு பதனிடும் நிலையங்கள், இறைச்சி பதனிடும் நிறுவனங்கள், இறால் பண்ணைகள், கருவாடு உற்பத்தி நிறுவனங்கள் என தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய தொழில் முயற்சிகள் உருவாக்க பட வேண்டும்

3. மாவட்ட ரீதியான பொருளாதார வலயங்கள் உருவாக்கப்பட வேண்டும் . கைத்தொழில் பேட்டைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்

4. பனம்/ தென்னை கைப்பணி மாதிரி கிராமங்கள் உருவாக்க பட வேண்டும்

5. பாதணித் உற்பத்தி நிறுவனங்கள் , தும்புத் தொழிற்சாலை, மின் தறி உற்பத்தி நிறுவனங்கள் , மட்பாண்ட உற்பத்தி உற்பத்தி நிறுவனங்கள் என சிறிய மற்றும் நடுத்தர முதலீடுகளுக்கு வாய்ப்பான தொழில்துறைகள் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சியும் கடன் உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்

6. நவீன தொழில் நுட்பச் சந்தையின் கேள்விகளுக்கேற்ப மென் பொருள் உற்பத்திக் கிராமங்களை அமைக்கும் முயற்சிகளும் முன் எடுக்க பட வேண்டும். அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை நோக்கி காத்திருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை வினைத்திறன்மிக்க தொழில்துறையில் ஈடுபடுத்த இது உதவும்

7. முல்லைத்தீவு ஒட்டு தொழிற்சாலை , பரந்தன் இரசாயன தொழில்சாலை , வாழைச்சேனை கடதாசி தொழிற்ச்சாலை, உப்பளங்கள் சூழலை பாதிக்காத வகையில் முழுமையாக இயக்கப்பட வேண்டும்

8. உட்கட்டுமான வேலைகள் பல நடைபெற்று வருகின்றன .பெருமளவில் இவற்றுக்கான ஒப்பந்தங்கள் தென்பகுதி நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன .இந்த நிறுவனங்கள் Unskilled தொழிலாளர்களை கூட தெற்கில் இருந்து அழைத்து வருகிறார்கள் இந்த நடைமுறைகள் தடை செய்யப்பட்டு குறைந்த பட்சம் Unskilled தொழிலாளர்கள் வடக்கு கிழக்கில் இருந்து உள்வாங்க பட வேண்டும்

9. விவசாயத்துறையை பொறுத்தவரை கணிசமான விவசாய பண்ணைகள் இன்னும் இலங்கை இராணுவத்தினர் வசமே இருக்கிறது .உள்ளூர் விவசாயிகளுக்கு போட்டியாக அவர்களும் விவசாயம் செய்கிறார்கள் .இது சந்தையில் நிரம்பலை அதிகரித்து உற்பத்திகள் விலை குறைந்து விவசாயிகள நட்டமடைந்து தொழிலை விட்டு வெளியேற முக்கியமான காரணமாக இருக்கிறது. இலங்கை இராணுவத்தினர் பிராந்திய மக்களின் பொருளாதாரத்தை ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டும்

10. பாடசாலை மாணவர்கள் , பல்கலை மாணவர்களுக்கு சர்வதேச ரீதியான தொழில்வாய்ப்புகளை தேடுதல் ,புலமை பரிசில் அடிப்படையிலான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்து தெளிப்படுத்த பட வேண்டும்.

11. தொழிற்கல்வியை வழங்கும் தொழிலநுட்ப கல்லூரிகள் அதிகரிக்க பட வேண்டும்

12. வள சுரண்டல்கள் தடுக்கப்பட வேண்டும்

13. பண்டிகை காலங்களை இலக்கு வைத்து உள் நுழையும் வெளி மாவட்ட வணிகர்கள் குறித்து தெளிவான பொறிமுறை உருவாக்க பட வேண்டும்

14. உள்ளூர் உற்பத்திகளில் சந்தைப்படுதலை பாதிக்கும் பன்னாட்டு நிறுவன உற்பத்திகள் , வெளிமாவட்ட உற்பத்திகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பட வேண்டும்

15. பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்கு வைத்த சுய உதவி குழுக்கள் உருவாக்க பட வேண்டும்

இங்கே அதிகரித்த வேலைவாய்ப்பு , வறுமை ஒழிப்பு , தேசிய உளநாட்டு உற்பத்திக்கான பங்களிப்பு , தன்னிறைவான பொருளாதாரம் என்கிற இலக்குகளை முன் நிறுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச, தனியார் மற்றும் மனை சார்ந்த கைத்தொழிற் துறைகளை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு சுயநிர்ணயம் பேசும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இருக்கிறது. இந்த தொழில் முயற்சிகள் உள்ளுர் வளங்களையும் பயன்படுத்தியதாகவும் உள்ளுர் விற்பனைச் சந்தையை மாத்திரம் நம்பியிராத தொழில் முயற்சிகளாகவே உருவாக்க வேண்டும்.

நன்றி – இனமொன்றின் குரல்