தமிழீழ கடற்படையின் சாதணை.

288

சிறீலங்கா கடற்படையும் இந்திய கடற்படையும் கூட்டாக இணைந்து கடற்புலிகளின் செயற்பாட்டில் அத்துமீறுவதென்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தித்த இழப்புகள் கணக்கில் அடங்காதது.
அவ்வாறான சம்பவம் ஒன்று…

மோட்டார் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதகப்பல் ஒன்று முல்லைதீவை நோக்கி வந்துகொண்டிருந்தவேளை திரிகோணமலைக்கு உயர எழுபது கடல் மைல் தூரத்தில் வைத்து இந்திய கடற்படையினரால் வழி மறிக்கப்படுகின்றது.மதியம் ஒருமணியளவில் மறிக்கபட்ட கப்பல் இரவு ஏழுமணியளவில் சிறீலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படுகின்றது.இந்திய கடற்படையும் சிறீலங்கா கடற்படையும் திரிகோணமலைக்கு உயர 70 கடல்மைல் தொலைவில் எங்கள் ஆயுதகப்பலை மறித்து வைத்துகொண்டிருந்த வேளை.

லெப்டினட் கேணல் டேவிட் தலைமையிலான படகு அணியொன்று சென்று அக்கப்பலில் இருந்த மாலுமிகளையும் போராளிகளையும் முக்கிய தளவாடங்களையும் மாற்றி எடுத்துக்கொண்டு அந்த கப்பலை கடற்கரும்புலி லெப்டினட் கேணல் சோழநம்பி,கடற்கரும்புலி மேஜர் வேங்கை மற்றும் கடற்புலி இளங்கேஸ்வரன் மூவருமாக அக்கப்பலை முல்லைதீவை நோக்கி நகர்த்தி கொண்டிருந்தவேளையில் இவ்நகர்தலை தடுக்கின்ற நோக்கோடு சிறீலங்கா கடற்படையும் அவர்களுக்கு துணையாக இந்திய கடற்படையும் ஒருசேர தாக்குதலை தொடங்கின அதிகாலை 2மணிக்குதொடங்கிய சண்டை காலை 5.30மணிவரை இந்த மோதல் நீடித்தது.

70கடல்மைல் தூரத்திலிருந்த எங்களின் ஆயுத கப்பல் கடற்புலிகளின் சாதூரியத்தால் தெற்காசிய வல்லரசு இந்திய கடற்படையின் தாக்குதலுக்கும் சிறீலங்கா கடற்படை தாக்குதலுக்கும் முகம்கொடுத்து மிகவும் இலாவகமான முறையில் கப்பலை செலுத்தி முல்லைதீவுக்கு உயர சரியாக 26கடல்மைல் தூரத்தில் வந்துகொண்டிருந்த பொழுது இந்திய இலங்கை கடற்படைகளால் கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது திணறிகொண்டிருந்தவேளையில் இச்சண்டை தங்களுக்கு தோல்வியை தந்துவிடும் புலிகளின் ஆயுதகப்பல் முல்லைதீவை வந்தடைந்துவிடும் என்ற பயத்தில் கோழை இந்திய இலங்கை கடற்படைகளால் விமானபடையின் உதவி கோரப்படுகின்றது. இரண்டு கடற்படைக்கும் உதவியாக சிறீலங்கா விமானபடை விமானங்கள் இரண்டுவந்து அடுத்தடுத்து குண்டுகளை எங்கள் ஆயுத விநியோக கப்பல்மீது வீசி எங்கள் கப்பலை மூழ்கடித்தனர்.

70கடல் மைலுக்கு அப்பால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்ட எங்களின் ஆயுதக்கப்பலை இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் ஒருசேர தாக்குதலை தொடுத்த போதிலும் அவர்களின் தாக்குதலை சமாளித்து மிகவும் இலாவகமாக கப்பலை செலுத்தி முல்லைதீவை நோக்கி கிட்டதட்ட 44 கடல்மைல் தூரத்தை கடந்துவிட்டிருந்த புலிகள் எங்கே…!
கூட்டாக தாக்குதலை தொடுத்தபோதும் அவர்களால் முடியாது,தோல்வி பயத்தில் விமானப் படையின் உதவியை கோரிய இந்திய இலங்கை கடற்படைகள் எங்கே…!
எதிரியால் விமானபடையின் உதவி கோரப்படவில்லையெனில் புலிகளின் ஆயுதகப்பல் நிச்சயம் முல்லைதீவை வந்தடைந்திருக்கும்.கடற்புலிகளை சிறீலங்காவின் கடற்படையால் நேருக்குநேர் நின்று வெற்றிகொள்ள முடியாமல் மோட்டு சிங்களன் விமானபடையின் உதவியை கேட்கிறன்.இவ்வளவுதான் சிங்களனின் பலம்.ஆட்கள் தொகையோ அதிகார பலமோ எங்கள் தானைத் தலைவர் வளர்தெடுத்த வரிபுலி கூட்டத்திற்கு முன்னால் சிதைந்தழியும்.

இக்கடற்சமரில் கடற்கரும்புலிகளான லெப் கேணல் தோழைநம்பி,மேஜர் வேங்கை ஆகியோருடன் கடற்புலிகளான மேஜர் இளங்கேஸ்வரன்,கப்டன் வாணன்,கப்டன் அருள் ஆகியோரும் வீரச்சாவை தழுவி கொண்டனர்.

ஈழத் தமிழ்மக்களின் விடயத்தில் இன்றளவும் துரோகத்தின் குறியீடாக விளங்கும் இந்தியாவும்,மற்றும் சீனா,பாகிஸ்தான்,அமெரிக்கா உட்பட ஏனைய உலகநாடுகளும் சிங்கள பேரினவாத அரசாங்கதிற்கு ஆயுத உதவியோ,ஆளணிகள் உதவியோ,இராணுவ தளவாடங்கள் வழங்குதலோ,பொருளாதார உதவியோ,மற்றும் எந்தவொரு இராணுவ ரீதியிலான ஆலோசனைகளோ உதவிகளோ வழங்காமல் சிறீலங்கா தனித்து விடப்பட்டால் முல்லைதீவிலிருந்து ஆமியை விரட்டியடிப்பது பெரிய விடயமல்ல,அதேநேரம் தாய் தமிழகத்தில் தமிழர் நலனை நேசிக்கும் ஆட்சியமைந்துவிட்டால் அவர்களின் மிக முக்கியமான உதவிகள் பங்களிப்புடன் இதை நடாத்திகாட்டுவது பெரியவிடயமல்ல.
எத்தனை ஆயிரம் ஆமி நிக்கிறான் இது எப்படி நடக்கும்? இது சாத்தியமா? என்று எண்ணத் தோன்றும் பலருக்கு.
இவ்வளவுக்கு பிறகும் மக்கள் எங்களை நேசிக்கவே செய்கின்றனர்.ஆட்கள் தொகையோ,ஆயுத பலமோ,அதிகாரவர்கத்தின் மிரட்டலோ எங்கள் வரலாற்று நாயகன் வளர்தெடுத்த வரிப்புலி கூட்டதிற்கு முன்னால் சிதறுண்டு பின்வாங்கி ஓடும் என்பதே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பலமுறை நிருபிக்கப்பட்ட உண்மையாகும்.

கதிர் ஈழம்