தமிழீழ மக்கள் புரட்சியும் – றோவின் சதி ஆட்டமும்!

95

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் – தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள்.

இந்த பதிவு எந்தவொரு தனிநபரையோ அல்லது அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தவோ அல்ல மாறாக உண்மை நிலையை எம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்காலிகமாக ஆயுத மௌனிப்பின் பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக தமிழீழ மக்கள் அறவழி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் இந்த அறவழி போராட்டத்தின் இயங்கு சக்தியாக இருப்பது தீயாக தீபம் திலீபன் அவர்கள்.

தியாக தீபம் திலீபன் அவர்கள் போராளியாக இருந்தாலும் அவர் எடுத்த இறுதி ஆயுதம் அகிம்சை. அந்த அகிம்சை போராட்டமே இன்று போராடும் எம்மக்ளுக்கு குறியீடாக தலமை தாங்கி வருகின்றது. இந்த அகிம்சை குறியீடு முதன் முதலில் வெற்றியீட்டி கொடுத்ததும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான் ஆக தமிழீழ மக்களின் அறவழிப்போராட்டத்தின் பிரணவ பொருளாக தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்து வருகின்றார் இது ஒரு சிறிய விளக்கம் சரி இனி விடையத்துக்குள் வருவோம்.

1987ஆம் ஆண்டு தியாக தீபம் உண்ணா விரதம் இருக்கின்ற போது இந்திய புலனாய்வு அமைப்பான றோ ஈழத்து துரோக ஆயுத குழுக்களை இறக்கி விட்டு தியாகி திலீபன் அவர்களின் அகிம்சை போராட்டத்தை கொச்சை படுத்தி மிக கேவலாமான பிரச்சாரத்தை முடக்கி விட்டுருந்தது ஆனால் பலன் இந்தியத்தின் வேசம் சர்வதேச மட்டத்தில் வெளுத்து போனது தியாக தீபம் திலீபனின் தியாகம் புதிய புரட்சியை ஈழமண்ணில் உண்டு பண்ணியது.

அதேபோன்றுதான் இன்றைய நாட்களில் 1988ஆம் ஆண்டு அளவில் அன்னை பூபதி அவர்களும் தியாக வேள்வியை ஆரம்பித்தார் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு எதிராக அன்றைய நாளில் றோவும் தமிழின துரோகிகளும் எதை செய்தார்களோ அதைத்தான் பூபதி தாய் மீதும் திருப்பி விட்டிருந்தது ஆனால் அதிலும் துரோகிகளும் இந்தியாவும் சிங்கள அரசும் மண்ணைக் கவ்வியது.

இவ்வாறு 2009இற்கு பின்னன் மீண்டும் அறவழி போராட்டத்திற்கு இட்டு செல்லப்பட்ட தமிழீழ மக்களின் குறியீடாக அகிம்சை வடிவில் தியாக தீபம் திலீபன் அவர்கள் தலமை தாங்கி வருகின்றார். கடந்த மூன்று ஆண்டுகளில் இது அதிகரிக்க தொடங்கியது.

இதற்கிடையில் 2017ஆம் ஆண்டு நிலமையை உணர்ந்த றோ தனது செல்ல பிள்ளைகளான தமிழின துரோகிகள் சிலரை ஈழத்திற்கு அனுப்பி வைத்து குழப்பங்களை விளைவித்தது காரணம் அந்த நாட்களில் மக்கள் போராட்டம் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் போராட்டமாகவே றோவின் பார்வையில் தெரிந்தது. இதனால் கட்களுக்குள் பிளவை மூட்டி எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம் என்று என்னி அதனை செயற்படுத்தியும் காட்டியது. ( இது பற்றி எனது முடக்கப்பட்ட முன்னைய முகநூலில் கடந்த வருடம் எழுதியிருந்தேன்)

காணி பிரச்சனை, வேலை பிரச்சனை என்று விக்கினேஸ்வரன் ஐயா பிரச்சனை தொடக்கம் கூட்டணி கட்சி வரை பிரச்சனைகளை றோ உண்டு பண்ணியது ஆனால் றோ நினைத்ததற்கு மாறாக மாபெரும் மாணவர் புரட்சி எழுந்தது. இந்த புரட்சிக்கு பின்னால் குறியீடாக தியாக தீபம் திலீபன் அவர்கள் அகிம்சை வடிவில் இருப்பதை அப்போதுதான் றோ உணர்ந்தது. இதன் பின்னர் இந்தியாவில் மேலும் இருந்த றோவின் துரோக கும்பலை அவசர அவசரமாக கடந்த ஆண்டு இறுதி பகுதியில் ஈழத்துக்கு அனுப்பி பரீட்சித்து பார்க்க நினைத்தது.

அதற்கு றோவும் தமிழின துரோக கும்பலும் தேர்தல் அரசியலை மையமாக கொண்டு எடுத்த ஆயுதம்தான் யாழ் பல்கலை வாளகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு. இதன் பின்னர் தியாக தீபத்தின் குறியீடு பூதாகரமாக வெடித்தது மாணவர்கள் மத்தியில் அதனையும் பொய் வாக்குறுதிகள் மூலம் சமாளித்தது றோ. அதனை தொடர்ந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டமாக இருக்கட்டும் அதற்கு ஆதராவாக புலத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களாக இருக்கட்டும் இந்த அணைத்து போராட்டங்களிலும் தெரிந்தும் மறைந்தும் குறியீடாக திகழ்ந்தது தியாக தீபம் திலீபன் அவர்களே.

ஆக தமிழிழ மக்களை தமக்குள்ளே பிளவு படுத்தி போராட்ட எண்ணத்தை மழுங்கடிக்க செய்ய வேண்டும் அதற்கு குறியீடாக இருக்கும் தியாக தீபம் திலீபன் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் காரணம் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இயற்பியல் குறியீடாக விளங்குபவர் தியாக தீபம் திலீபன் அவர்களே. எனவே அகிம்சை என்ற சொல்லை தமிழீழ மக்கள் வசைபாட தொடங்கி விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் என்று எண்ணியது. இதனை புலத்தில் இருந்து செயற்படுத்தவும் என்னி ஈழத்தை சேர்ந்த பிரபல ஊடகத்தின் துணையோடு லண்டனில் உள்ள குறித்த ஊடகத்தின் அலுவலகத்தில் திட்டத்தை தீட்டியது அதற்கு பலியாடாக எதுவுமே தெரியாத அம்பிகை அவர்கள் மாட்டிக்கொள்கின்றார்.

இந்த போராட்டத்தின் நிறைவு நாளில் நடந்த நிகழ்வுகளையும் பார்த்தோம் இதன் பயனாக அகிம்சை என்ற பெயரை கூட நம்மவர்களில் வெறுக்கும்படியான நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததையும் பார்த்தோம் அதனை இங்கு குறிப்பிடுவது நல்லது இல்லை என்று நினைக்கின்றேன். அதனை தொடர்ந்து ஈழத்திலும் குறித்த நாடகத்தை றோவும் அதன் அடிவருடிகளும் நிகழ்த்திகொண்டு இருக்கின்றனர் எதுவும் புரிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்களை பயன்படுத்தி ஆனால் தமிழீழ மக்களையும் அவர்களின் போராட்டங்களையும் அகிம்சை குறியீடான தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களை அழிக்கவும் முடியாது பிரிக்கவும் முடியாது என்பதை றோ உங்களால் அல்ல உங்கள் அப்பன் வந்தாலும் வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.

ஆனால் றோவும் அதன் அடிவருடிகளும் சிங்கள அரசும் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் ஐ.நாவில் தப்பலாம் ஆயிரம் சர்வதே நீதிமன்றங்களிலும் இருந்து தப்பலாம் ஆனால் ஒருநாள் தமிழீழம் மலரும் அந்த தமிழீழ அரசிடம் இருந்து தப்ப முடியாது இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கையைவிட மோசமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

ஈழம் புகழ் மாறன்