<தமிழ் கையெழுத்து இயக்கம் ஆரம்பிப்போமா?>
ஒன்று; தமிழ் அறிந்தவருடன் தமிழிலேயே உரையாடுகிறேன்.
இரண்டு; தமிழ் மொழியில் தெளிவாக விளங்கும் வண்ணம் எனது கையெழுத்தை இடுகிறேன்.
எனது மொழியின அடையாளத்தை பேண நான் இந்த இரண்டு விடயங்களை கட்டாயமாக செய்கிறேன்.
அதாவது, அதிகாரபூர்வமாக, ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு விட்டு, தமிழர்கள் மத்தியில் தமிழில் கையெழுத்திட்டு பூச்சாண்டி காட்டுவதல்ல. (அப்படி எனது சில தமிழ் அரசியல் நண்பர்கள் செய்கிறார்கள்.)
நான் அப்படியல்ல. எங்கேயும், எப்போதும் இளமையிலிருந்தே, அதாவது நேரடி அரசியலுக்கு வர முன்பிருந்தே, என் கையெழுத்து தமிழில்தான்.
என் கையெழுத்தை பார்த்தால், சரளமாக, “மனோ கணேசன்” என்று வாசிக்கலாம்.
ஆகவே “தமிழ் கையெழுத்து இயக்கம்” என்ற ஒன்றை ஆரம்பிப்போம்