வணிகத்தோடு தொடர்புள்ள பல ஆங்கில சொற்களுக்கான தமிழ் வேர்சொல்

78

காசு என்பதுதான் cash..

பண்டமாற்றாக மதிப்பு மிக்க மணிகளைப் பயன்படுத்தியதால்தான் பணத்திற்கு Money என்று பெயர்..

அக்கு என்றால் உரிமை..குறிப்பிட்டோருக்கே உரிமை உண்டு எனும் பொருளில் அக்கு+உண்டு என்று சொன்னதே Account ஆனது..

ஏகநேமி என்பதுதான் Economy..ஏகம் என்றால் ஒன்று..நேமி என்றால் உலகம்..பொருளியலின் நோக்கம் ஒற்றை உலகம்..

தமிழ்நாட்டு காரைகளைக் கொண்டு தமிழ்நாட்டு பெருந்தச்சர்கள் வடிவமைத்து கட்டப்பட்டதே பிரமீடுகள்..காரைப் பெருமேடு என்பதே Corporate ஆனது..

உலகெங்கும் புத்தாண்டு சனவரி ஒன்றுதான் என்றாலும் வணிகப் புத்தாண்டு(நிதியாண்டு) தொடக்கம் பங்குனி-சித்திரை தான்..(ஏப்ரல் 1)

தமிழ்நாட்டு வணிகர்கள்தான் தங்கள் தொழில் கணக்குகளை சித்திரையில் தொடங்கும் பழக்கம் கொண்டவர்கள்…சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு ஆனதும் அப்படிதான்..

அனைத்திற்கும் மேலாக உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தும் தத்துவம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான்..

உலகாயதம் அது..!

உலகம்+ஆயம்+அதம்= உலகாயதம்

ஆயம் என்றால் மக்கள் கூட்டம்..

அதம் என்றால் கட்டுப்படுத்துதல் என்று பொருள்..உலகாயதம் என்றால் உலக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் என்றுதான் பொருள்..!

இன்னும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன..உலகை ஒற்றைக் குடையின் கீழ் ஆள்வதற்கான செயல்திட்டம் தீட்டப்பட்டது முதன்முதலில் தமிழ்நாட்டில் தான்..!

– நன்றி ஆரல்கதிர் மருகன்