தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த சிறிலங்கா புலனாய்வுதுறை யாழ் தமிழ் இளைஞர்

116

யாழ். வடமராட்சியைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (19) மாலை பிஸ்டலால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் கல்முனையில் உள்ள தேசிய புலனாய்வுப் பிரிவுக் காரியாலயத்தில் நடந்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் வடமராட்சி கரணவாய் மத்தியைச் சேர்ந்த 21 வயதுடைய கே. கமல்ராஜ் எனத் தெரியவருகின்றது.குறித்த காரியாலயத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் தனிமையில் இருந்த நிலையிலேயே குறித்த அதிகாரி, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காதல் பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளார் என முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போது 21 வயசு என்றால் 19/20 வயதுகளில் சிறிலங்கா புலனாய்வுதுறையில் சேர்ந்திருக்கலாம்.கூடவே பிஸ்டல்..இப்படி எத்தனை தமிழர் இளைஞர்கள் இப்படி குப்பை கொட்டுகிறார்களோ தெரியவில்லை.ஆனால் அவதானித்த ஒரு விடயம் பொதுவாக சிறிலங்கா காவல்துறை,இராணுவத்தில் சேர்ப்பவர்கள் இங்கே ஒரு போர் நடந்தது குறித்து கரிசனையற்றவர்கள்,சிறிலங்கா கிரிக்கெட் டீமை அதிகமாக வெறிதனமாக விரும்புகிறவர்கள், காணாமல் போன பிள்ளைகளை தேடி பெற்றோர் அலைவது குறித்து அறியாதவர்கள்,2009 இனப்படுகொலை குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் அற்றவர்கள்.இவர்கள் இப்படி உள்ளூரில் தங்கள் இஷ்டத்தில் அலைய,புலம்பெயர் தேசத்திலும்,தமிழ்நாட்டிலும் இளைஞர்கள் தமிழ் தேசியம்,ஈழதமிழர் இனபடுகொலை குறித்து அதிக அக்கறையாக களத்தில் இறங்கி கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் இப்படியாக இருந்து தொடர்ந்து விலைபோகாமல் ஒவ்வொன்றாக எதோ ஒரு வகையில் விபத்து,தற்கொலை என்று தங்களின் முடிவுகளை தேடிகொள்வதே இந்த இனத்துக்கு அவர்கள் செய்யும் ஒரே ஒரு நல்ல விடயமாகும்.