யாழில் CID என அடையாளப்படுத்தி 20 வயது யுவதியை கடத்திய கும்பல்

82

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு புகுந்து தங்களை பொலிஸ் CID பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரால் அங்குள்ளவர்களை தாக்கிவிட்டு 20 வயது யுவதி கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலையில் நடந்த குறித்த கடத்தலை வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது: ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் இன்று அதிகாலை வேளை கொடிகாமத்தில் உள்ள வீடொன்றிற்குள் 7 பேர் கொண்ட குழுவினர் புகுந்துள்ளனர். வீட்டிற்குள் புகுந்த அவர்கள் தங்களை பொலிஸ் CID பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், தமது கைகளில் இருந்த கத்தி, வாள் போன்றவற்றால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் அந்த வீட்டில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் யுவதியை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.இருப்பினும் குறித்த யுவதி கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் அருகில் உள்ள கோவிலில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உண்மையில் சிங்க கூட்டமாகவும் இருக்கலாம் அல்லது சிங்கள கூட்டதோடு சேரும் தமிழ் காவாலிகளாகதான் இருப்பார்கள்.கீழ்தரமான வேலைகளில் ஈடுபடும் தமிழர்களை அழித்தொழிப்பதன் மூலமே விடுதலை போரில் உள்ள ஒரு இனத்தின் அகதடைகள் நீங்கும்.இவர்கள் கைது செய்யப்படுவதுமில்லை,அப்படி செய்யப்பட்டாலும் சில மாதங்களில் அரச காவல்துறை உபசரிப்போடு வெளியில் வந்துவிடுகிறார்கள்.உங்கள் உங்கள் ஊரில் உள்ள இவ்வாறானவர்களை நீங்களே தட்டி கேட்கும் போதுதான் இத்தகைய பிரச்சினைகள் இல்லாது போகும்.உன் வீடு உன் குடும்பம் என்று இன்று விட்டால்,நாளை உங்களின் குடும்பமும் இந்த லிஸ்ட்ல வரும்,உலகம் முழுதும் வரலாறு அதுதான்.