தியாக தீபம் திலீபனின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சற்று முன்னதாக ஆரம்பிமாகியுள்ளது.
தென்மராட்சி சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் குறித்த உண்ணாவிரதம் சற்று முன்னதாக ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசுக் கட்சிகளின் பல தலைவர்கள் குறித்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.