மக்கள் சரியாக வாக்களிக்காவிட்டால் தமிழினம் மீண்டெழ முடியாமல் போகலாம் – கஜேந்திரகுமார்!

எதிர்வரும் தேர்தலில் மக்கள் சரியாக வாக்களிக்காவிட்டால் தமிழினம் மீண்டெழ முடியாமல் போகலாம் என தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

தமிழர் தாயகத்தில் உள்ள மைய பிரதேசம்தான் மட்டக்களப்பு மாவட்டமாகும். இந்த மாவட்டம்தான் தென்தமிழ் தேசத்தின் இதயம் இந்த மண்ணை ஏனைய பிரதேசத்திலிருந்து பிரிப்பதற்கு பாரிய குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்த மண் தமிழரசுக் கட்சியின் கோட்டையாக இருந்தது வந்தது. இந்த மண்ணில் அரசியல் செய்வது என்பது ஒரு சாதாரண விடயமல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தின் வாழைக்காலை எனுமிடத்தில் நேற்றுமுன்தினம் (27.07.2020)மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் .
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

எமக்கு எந்த சவால்கள் வந்தாலும் அவைகளைத் தாண்டி எமது அரசியல் பயணம் சென்றுகொண்டே இருக்கும் நாங்கள் உயிரோடு இருக்கும் வரைக்கும் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த 10 வருடங்களாக மக்கள் வாக்களித்து வந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய முகங்களை தான் மக்கள் தெரிவு செய்கின்றார்கள்.

தங்களுக்கு முன்னுரிமை வழங்க அனைவருக்கும் மக்கள் வாக்களிக்காத தன்மை இருக்கின்றது இனியும் நாம் ஏமாந்து போகக்கூடாது என்பதற்காக மக்கள் இந்தத் தேர்தலில் விழிப்படைந்து உள்ளார்கள். இதுதான் இந்த தேர்தல் முக்கிய விடயமாக உள்ளது இந்த தேர்தலில் மக்கள் சரியாக வாக்களிக்கா விட்டால் இன்னும் மீண்டெழ முடியாமல் போகலாம்.
எனவே இந்த தேர்தலை வித்தியாசமாக மக்கள் பார்க்க வேண்டும்.

இது இவ்வாறு இருக்க ஒரு நாட்டின் பிரதான சட்டம்தான் அரசியல் அமைப்பாகும் அரசியலமைப்பை நாட்டினுடைய இரண்டாவது முக்கிய இனமாக இருக்கின்ற தமிழர்கள் நிராகரிப்பதாக இருந்தால் அந்த நாட்டிலேயே தமிழர்களுக்கு இனப் பிரச்சினை இருக்கின்றது என்பது தான் அர்த்தமாகும். எனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர வேறு எந்த ஒரு தரப்பிற்கும் எமது மக்கள் வாக்களித்தால் அமையப் போகின்ற புதிய அரசினால் கொண்டு வரப்படுகின்ற நான்காவது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை தமிழ் மக்கள் விரும்பி ஆதரித்து எமது உரிமைகளை நாங்களாகவே கைவிடுகின்ற நிலைமை உருவாகும்.

ஏனெனில் அதுமாத்திரமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, கருணாவின் ஐக்கிய தேசிய கட்சி, ஈபிடிபி, உள்ளிட்ட அனைவரும் அந்த அரசியல் அமைப்பை ஆதரிக்க போகின்றது. இதுதான் உண்மை நிலைமை.

எனவே எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர வெறி வரைக்கும் வாக்களித்தார் நாங்களாகவே விரும்பி நமது உரிமைகளை கைவிடுவதற்கு சமனாகும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.