மூதூர் தன்னார்வ தொண்டு பணியாளர்களின் படுகொலைகள் இன்றுடன் 14ஆ ண்டுகள்!

122

மாவி­லாறு யுத்தம் தொடங்­கப்­பட்டு சுமார் நான்கு நாட்­க­ளுக்குள் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை மாத்­தி­ர­மல்ல, உலக நாடு­க­ளையே கதி­க­லங்க வைத்த மூதூர் படு­கொ­லை­யென வர்­ணிக்­கப்­படும் அக்­ஈஷன் பாம் தொண்­டர்­க­ளான 17 பேர் கொல்­லப்­பட்­டார்கள். (4.8.2006) அவர்­களின் உயிர்கள் பறிக்­கப்­பட்டு இன்­றுடன் 14­ வ­ரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

இப்­ப­டு­கொ­லையில் அக் ஷன் பாம் தொண்­டர்­க­ளான முத்­து­லிங்கம் நர்மதன், சக்­திவேல் கோணேஸ்­வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்­க­ராஜா பிறீமஸ், ஆனந்­த­ராஜா மோகனதாஸ் ரவிச்­சந்­திரன், ரிஷி­கேசன், கன­க­ரத்­தினம் கோவர்த்­தனி, கணேஷ் கவிதா, செல்­லையா கணேஷ் சிவப்­பி­ர­காசம் ரொமிலா, வயி­ர­முத்து கோகி­ல­வ­தனி, அம்­பி­கா­வதி ஜெய­சீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரை­ராஜா கேதீஸ்­வரன், யோக­ராஜா கோடீஸ்­வரன், முர­ளீ­தரன் தர்­ம­ரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா, ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக் ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்­காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து நிலத்தில் குப்­பு­றப்­ப­டுக்கப் பண்ணி பின்­பக்­க­மாக தலை­யில் சுட்டு படு­கொ­லை­ ப­டுத்­தி­ய­தாக அன்­றைய செய்­திகள் தெரி­வித்­தன

இந்தப் பணி­யா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­போது தாங்கள் கட­மை­யாற்றும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தை அடை­யா­ளப்­ப­டுத்தும் சீரு­டைகள் அணிந்து இருந்­த­துடன் நிறு­வன வளா­கத்­துக்­குள்­ளேயே பல நாட்கள் தங்­கி­யி­ருந்­துள்­ளனர். மாவி­லாறு யுத்தம் மூண்­டதன் கார­ண­மா­கவும் உக்­கி­ர­மான போர் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையே வெடித்த நிலையில் வெளியில் செல்ல முடி­யா­மலும் மாற்றார் வந்து பாது­காப்­பு வழங்க முடி­யாத நிலையில் நிறு­வன வளா­கத்­துக்குள் சுமார் மூன்று நாட்கள் உண­வின்றி, உறக்­க­மின்றி, பாது­காப்பைத் தேட­மு­டி­யாமல் அடை­பட்­டுப்போய்க் கிடந்த அவர்­க­ளுக்­குத்தான் ஆகஸ்ட் 4 ஆம் திகதி அந்தக் கொடூரம் நடந்­தது. இப்­ப­டு­கொ­லையில் பலி­யா­ன­வர்­களில் மணம் புரி­யாத 4 இளம் பெண்கள், ஏனைய 13 பேரும் ஆண்­க­ளாவர்.

படுகொலை செய்யப்பட பணியாளர்கள் விபரம்
இப்­ப­டு­கொ­லையைக் கேள்­வி­யுற்ற பல்­வேறு சர்­வ­தேச அமைப்­புக்கள், மனித உரிமை ஸ்தாப­னங்கள், ஆர்­வ­லர்கள், கதி­க­லங்கிப் போனர்கள். சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் ஐ.நா.வின் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னிகர் ஆலயம் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் உட்­பட்ட பல அமைப்­புக்கள் இப்­ப­டு­கொ­லையை, வன்­மை­யாகக் கண்­டித்­தன. மனித குல­வ­ர­லாற்றில் கண்­மூடித்­த­ன­மான காட்­டு­மி­ராண்­டித்­தனம் என அவை சாடி­யி­ருந்­தன .

அக்­கொ­டூரக் காட்­சியைப் பார்த்த சிலர் இப்­படி விவ­ரணம் செய்­தார்கள். மனித மூளை­கள் தரை­யெல்லாம் சிதறிக் கிடந்­தன. மனித சரீ­ரத்தின் உன்­ன­த­மான பார்வை மணிகள் பரவிக் கிடந்­தன என அக்­காட்­சியை சம்­பவம் நடை­பெற்­ற­தற்குப் பின் பார்த்­த­வர்கள் அழுது புலம்­பி­ய­தாக அந்­நா­ளிலே செய்­தி­ வெ­ளி­யிட்ட ஏடு ஒன்று தெரி­வித்­தி­ருந்­தது. கடந்த 25 வரு­ட­கால வர­லாற்றில் இவ்­வா­றா­ன­தொரு கொடு­மை­யான படு­கொலை நடந்­த­தில்லை­யென பிரான்ஸ் நாட்டில் இயங்கி வரும் பட்­டி­னிக்கு எதி­ராக செயற்­பட்­டு­வரும் அமைப்­பான ACF தெரி­வித்­தி­ருந்­தது.