QQ அன்று நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. அது ஒரு நடுவர் நீதிமன்றம் . ஒரு இளைஞனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தனர். அவனுக்கு வயது 30 இருக்கும். மெலிந்த உடல். கண்களில் ஏதையோ பறிகொடுத்ததைப் போன்ற இருள் படர்ந்த பார்வை.
அந்த இனைஞன் ஆரிய பார்ப்பனீயத்தையும், திராவிட லும்பன்களையும் எதித்து போராடும் ஓர் அகிம்சை போராளி. அவன் கல்லூரி காலத்திலிருந்தே போராடுபவன்
ஆனால் அங்கு நடந்து கொண்டிருக்கும் ஆட்சியோ ‘திராவிட ஆரிய கலப்பு ஆட்சி.’ சும்மா விடுவார்களா அந்த இளைஞனை கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தினார்கள்.
நீதிபதி கேட்டார் “உன் பெயர் என்ன?”
“தமிழ் மகன்” என்று பதில் சொன்னான் அந்த இளைஞன்.
“ஆயுதம் வைத்திருந்தாயா ?” என்றார் நீதிபதி
“ஆம் “ என்றான் அந்த இனைஞன்
“உன்னை ஆயுதச் சட்டத்தில் கைது செய்துள்ளார்கள்…..
14 நாள் காவலில் வைக்கிறேன் “ என்றார் நீதிபதி.
“ஐயா நான் ஆயுதச் சட்டப்படி எங்கே ஆயுதம் வைத்திருந்தேன்?” என்றான் அந்த இளைஞன்
உடனே நீதிபதி காவல்துறையினரை பார்த்து “எங்கே அந்த ஆயுதம்?” என்றார்
“ஐயா எடுத்து வர மறந்துவிட்டோம் ஒரு பத்துநிமிடம் பொறுங்கள்” என்றனர் காவல்துறை கோரசாக.
சரி என்று நீதிபதி எழுந்து அவரது அறைக்குள் சென்று விட்டார்.
பத்துநிமிடம் கழித்து காவல்துறையினர் படை பட்டாளத்தோடு நீதிபதியின் அறைக்குள் நுழைந்தனர்.
அந்த இளைஞனின் வீட்டில் இருந்து ஒரு சிறிய புத்தகத்தை எடுத்து வந்திருந்தனர். அதை நீதிபதியிடம் காட்டினர் அதில் 13 வது பக்கதில் ஆயுத எழுத்து என எழுதப்பட்டிருந்தது. அதில் படங்கள் இருந்தது. அது அவரது வீட்டில் உள்ள அவரது குழந்தையின் ‘அனா ஆவன்னா அட்டை.”
அதை பாத்ததும் நீதிபதி நிமிர்ந்து காவல்துறையை பார்த்தார்.
ஐயா இது தமிழில் உள்ள எழுத்து. ஆயுதம் . ஆயுதம் வைத்திருப்பது குற்றம் என்று தெரிந்து இவனது தந்தை “தமிழ்” ஆயுதத்தை மறைத்து வைத்துள்ளார்.
எங்களது விசாணையில் இவன் “தமிழ் மகன்” என பெயர்வைத்துள்ளதால் இவனும் இவன் அப்பனும் இந்திய ஆயுதச் சட்டப்படி குற்றவாளிகளே என்று மூச்சிறைக்க வாதிட்டார் அந்த காவல்துறை.
“ நீங்கள் எந்த பிரிவு காவல்துறை ?” என்றார் நீதிபதி
ஐயா நாங்கள் “Q பிரிவு” . அது ஆங்கிலம்.
எங்களுக்கு தமிழ் பிடிக்காது என்றனர்.
“இவன் இவனது மொழியிலேயே ஆயுதத்தை வைத்துள்ளான். இவனை விடக்கூடாது “என்று வாதிட்டார்கள்.
நீதிபதியும் அவர்கள் சொன்னதில் உண்மையிருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்த இளைஞனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த இளைஞனை இழுத்துச் சென்று முதுகுளத்தூர் சிறையில் அடைத்துவிட்டனர் காவல்துறையினர்.
அவனது தந்தையான “தமிழ்”ஐ தலைமறைவு குற்றவாளியாக காண்பித்து தேடி வருகின்றனர். தகவல் கொடுத்தால் தக்க சன்மானம் கிடைக்குமாம்.
– புகழேந்தி