#எமது இனத்தை அடிமை கொள்ள நினைக்கும் சிங்கள தேசத்து சக்கரவர்த்திகளே.ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அல்லது அறிந்து கொள்ள முற்படுங்கள்…
#வடக்கு கிழக்கு இணைந்த நிலம் தமிழர்களின் பூர்வீக நிலம் இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றுமே.நாம் அடிமைகள் இல்லை.எம்மை யாரும் அடிமைப்படுத்த முடியாது.நாம் அடிமைகளாக வாழ்வதற்கு பிறந்தவர்கள் அல்ல அதை கடந்தகாலத்தில் நிரூபித்தவர்கள் நாம்…
#நாம் வாழ்வதற்காக மட்டும் பிறந்த இனம் அல்ல போராடுவதற்கும் பிறந்த இனம் என்பதை கடந்த காலத்தில் நினைவுபடுத்தி உள்ளோம்.நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க துடித்தவர்கள் எமது தாய் நிலத்தில் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…
#நாம் இலங்கைத்தீவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியில் நாம் ஒரு தேசிய இனம்.எமது இனத்தை அழித்து எமது நிலத்தை ஆக்கிரமித்து எம்மை அழித்து விடலாம் என்று கனவு காணாதீர்கள்.அப்படி நினைத்தால் உங்கள் கனவுகள் உங்களுக்கு சொந்தமில்லை எப்பொழுதுமே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்…
#வந்தேறு குடிகளே வந்து வாழ்ந்து விட்டுப் போங்கள் ஆனால் எமது வாழ்விடத்தை உரிமை கோராதீர்கள்.நாம் வாழ பிறந்தவர்கள் மட்டுமல்ல ஆளப்பிறந்தவர்கள்.இன்று நல்லிணக்கம் என்ற சொற்பதத்துடன் எமது மக்கள் நடந்து கொள்கிறார்கள்.அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் இன்றைய ஆட்சியாளர்களே…
#நாம் கடந்த காலத்தை நினைவில் வைத்து நிகழ்காலத்தில் வாழ துடிப்பவர்கள் ஆனால் எமது அடிப்படை உரிமைகளை இழந்து அல்ல.இழப்புக்கள் என்றும் எமக்கு புதியவை அல்ல நினைவுபடுத்துகிறோம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்….
#நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் இன்று அமெரிக்கா வல்லாதிக்க நாட்டில் ஒரு கருப்பின மனிதரின் உயிர் போனதற்கு போராடியவர்கள் கைகளில் எந்தவித ஆயுதமும் இல்லை.ஆனால் அந்தப் போராட்டம் வெற்றி அடைந்தது அடைந்து கொண்டிருக்கிறது.உலகம் திரும்பிப் பார்த்த வரலாறு இன்று நடக்கிறது கடந்த காலங்கள் போல் எம்மை அழித்து அடிமைப்படுத்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள்.இன்று காலம் மாறிவிட்டது…
#அமைதியை போதித்த புத்த பகவான் தான் உங்களின் நாயகன்.ஆனால் இன்று அமைதியற்ற பூமியாக மாற்றுவதும் அவரின் வழிவந்தவர்கள் தான்.இன்று சமூக முரண்பாட்டை ஏற்படுத்துபவர் புத்த பிக்குவான பொதுபலசேன அமைப்பின் தலைவர் ஞானசார தேரோ…
#புத்த பகவானின் உண்மையான புத்த பிக்குகளை நாங்கள் மதிக்கிறோம் என்றுமே.எமது இனத்தை அழிக்க எமது நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் எந்த புத்த பிக்குவை நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை..
#பொதுபல சேன அமைப்பின் தலைவர் கூறியிருந்தார்.வடக்கு கிழக்கு தமிழருக்கு சொந்தமான இடம் இல்லை.அது பௌத்த மதத்திற்கு சொந்தமான நிலம் என்று.காவி உடை உடுத்தினால் எல்லோரும் கருத்து சொல்ல இலங்கை அரசு அனுமதித்தால் நாங்களும் கருத்து சொல்லுவோம் நமது மக்களுக்காக என்பதை தெளிவு படுத்துகிறேன்…
#கவலையான விடயம் இன்று மக்களை நேசிக்கிறோம் என்று சொல்லும் எமது தமிழ் தலைமைகள் இவரின் கருத்தை எதிர்த்து பதில் கூற தயங்குவது ஏன் தேர்தல் நெருங்கி விட்டது என்பதாலா.மக்களே முடிந்தவரை எமது தலைமைகளை புரிந்து கொள்ள முற்படுங்கள்….
#எனது கருத்து சரி என்று பட்டால் பகிர்ந்துகொள்ளுங்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்….
ஆதங்கத்துடன்
அரசியல் சாணக்கியன்…