தமிழனின் வீரத்தை உலகறிய செய்த நாள்

246

குதிரையின் குணம் தெரிந்துதான் ஆண்டவன் அதைக் கொம்புள்ள மிருகமாகப் படைக்கவில்லை என்று ஒரு பழமொழி உள்ளது.

அதுபோல் தான் புலிகளின் வீரம் தெரிந்துதான் இயற்கை தமிழீழத்தை ஒரு சிறிய நிலப்பரப்பாக அமைத்து விட்டது போலும். இல்லையேல் அனைத்து வரலாற்றையும் அவர்களே படைத்து விட்டுப் போயிருப்பார்கள்.

இன்று கட்டுநாயக்க படைத்தளம் அழிக்கப்பட்ட நாள்.

தமிழீழம் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் இரட்டிப்பானதாக இருந்திருந்தாலே போதும், சிங்களத்தை மட்டுமல்ல உலக வல்லரசுகளையே தெறிக்க விட்டிருப்பார்கள் புலிகள்.

புலிகளின் அதியுச்ச சாதனையான கட்டுநாயக்க, அனுராதபுர வான்படைத் தளங்கள் மீதான அழித்தொழிப்பின் போது இந்த நிலப் பரப்பு பற்றாக்குறை காரணமாகவே யுத்த விமானங்களை அழித்தொழிப்பு செய்தார்கள். இல்லையேல் விமானங்களை அழிக்காமல் தமிழீழத்தில் தரையிறக்கியிருப்பார்கள்.

வரலாறும் வேறு விதமாக மாறியிருக்கும்.

யோசித்துப் பாருங்கள். உலகில் யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத சாதனையைத் தமதாக்கியிருப்பார்கள் புலிகள்.

அத்தோடு புலிகளின் படைத்துறை ஆளுமையை விட அவர்களின் அறிவியல் ஆளுமையும் பரிணாமத்திற்கு ஏற்ற வகையில் எதையும் விரைவாகக் கற்றுக் கொள்ளும் உத்தியும்தான் புலிகளின் தனித்துவம்.

அறிவியலில் கற்பனைக்கெட்டாத சாதனைகளையும், அறிவையும் கொண்ட முதலும் கடைசியுமான ஒரே ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் புலிகள்தான்.

எனவே இந்த வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டாடுவோம்.

இதுதான் எமது அரசியலின் அடிப்படை.