தமிழர்களின் சமாதானத்திற்கான கடைசிக்கதவும் தகர்க்கப்பட்ட நாள்.

175

தமிழீழத்தின் மொத்தப் புன்னகையாக இருந்த தமிழ்ச்செல்வன் அண்ணையின் ஒற்றைப் புன்னகையை இந்த உலகம் எம்மிடமிருந்து பறித்துக்கொண்ட நாள்.

தமிழ்ச்செல்வண்ணையின் படுகொலைமூலம் உலகம் தமிழர்களை படுகொலை செய்வதற்கான அங்கிகாரத்தை சிறிலங்காவுக்கு வழங்கிவிட்டிருந்தது.

விமானக்குண்டு தமிழ்ச்செல்வண்ணையின் இருப்பிடத்தை குறிவைத்தபோது எம் நெஞ்சங்கள் பதைபதைத்தது.
விழுந்து வெடித்த குண்டுகளின் அதிர்வுகளில் எம்மேனி ஒருமுறை அசைந்து நின்றது.
பரபரப்புடன் அனைவரது வோக்கியும் அலறத்தொடங்கியது.
அலெக்சின் தொடர்புக்காக ஏங்கியபடி
வாகனங்கள் குண்டுவெடித்த இடம்நோக்கி விரைந்தன.
அங்கே அலெக்சும் உயிரற்ற உடலாக சிதறிக்கிடந்தான்.

தமிழ்ச்செல்வண்ணையை போராளிகள் தேடினர்.இடிபாடுகளுக்கு மத்தியில் மூடப்பட்டுக்கிடந்த அவரது இருப்பிடத்தை கைகளாலும் மண்வெட்டிகளாலும் தோண்டியபடி துடிதுடித்தபடி தேடினர் போராளிகள்.
முதலில் கைதான் தெரிந்ததாம் எனச்சொன்னான் ஒரு போராளி.
பின்னர் மீட்டுவந்தனர் எங்கள் சமாதானப் புறாவின் மூச்சிழந்த உடலை.
அப்போதும் எங்கள் தமிழ்ச்செல்வண்ணை புன்னகைத்தபடியே சரிந்து கிடந்தார்.

சிங்களத்தின் அன்றைய பாதுகாப்பு செயலாளர் இனப்படுகொலையாளி கோத்தபாய அதேநாள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று நிம்மதியாகப் படுத்துறங்குவேன்” என்றான்.

தமிழினம் தன் மார்பில் அடித்து அழுதுகொண்டிருந்தது.
சமாதானம் பேசி உள்நுழைந்த உலகநாடுகள் செவிடாய், குருடாய்,
ஊமையாய் கிடந்து பச்சைத் துரோகத்தை அரங்கேற்றி முடித்தது.

தமிழர் வரலாற்றின் கறைபடிந்த நாளாக
இந்நாள் நிலையாகிப்போனது.

நினைவுகளுடன்….
புலவர்.