தமிழில் பெயர் வைத்துக்கொள்வதில்லை,
தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதில்லை,
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பொங்குவதில்லை,
தீபாவளியும் அவர்களுக்கில்லை,
தாலியும் தடை, தலையில் பூவும் தடை நெற்றியில் பொட்டும் வைப்பதில்லை
வேட்டி கூட வேண்டாத ஒன்று…
கேட்டால் தாங்களும் தமிழராம்…
தமிழரென்ற அடையாளம் தொலைத்து தமிழ் மட்டும் பேசினால் தமிழன் ஆகிவிட முடியுமா?
தமிழரசன் என்று இருக்கும் பெயரை தாவீது என்று மாற்றும் போது நீயேன் கேள்வி கேட்பதில்லை?
அன்பரசன் என்ற பெயரை அப்துல்லா என்று மாற்றும் போது நீயேன் மெளனியாக இருக்கிறாய்?
நீ மதம் மாறுகின்றாயா இல்லை இனம் மாறுகின்றாயா?
மதத்தை பின்பற்றும் உரிமை எனக்குண்டு என் தமிழ் பெயரை மாற்றும் உரிமை உனக்கு யார் தந்ததென்று எதிர்த்து கேள்வி கேட்டிருந்தால் நானும் ஏற்றுக்கொள்வேன் உன்னை தமிழனென்று…
சோத்துக்காகவும், சொத்துக்காகவும், சுகத்துக்காகவும் மதமென்ற பெயரில் பெயர் மாற்றிக்கொள்ளும் எவனுக்கும் அறுகதை இல்லை தன்னை தமிழனென்று சொல்லிக்கொள்ள…
ஆங்கிலேய அரேபிய ஐரோப்பிய அடிமையாக இருப்பதில் உனக்கென்ன அவ்வளவு பெருமை?
நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா மதம் மாற்றப்படுகையில் ஏன் எங்கள் பெயர்கள் மாற்றப்படுகிறதென்று?
அதை சிந்தித்திருந்தால் நீ உன் அடையாளம் அழிக்கப்படுகிறதென்பதை உணர்ந்துகொண்டிருப்பாய்… ஒரு போதும் உன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கமாட்டாய்…
உன் மண்ணுக்குறிய உன் இனத்துக்குறிய எந்த அடையாளங்களும் எந்தக்கொண்டாட்டங்களும் எந்த கலாச்சாரங்களும் உனது இல்லையென்று தன் மண்ணுக்குறிய, தன் இனத்திற்குறிய தன் கலாச்சாரத்துக்குறிய அடையாளங்களை உன் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ளும் நாளில் இருந்து நீ அடிமையாக்கப்படுகிறாய்…
சிந்தி…
தமிழன் என்பது உன் அடையாளம் தமிழனுக்கென்ற அடையாளம் அனைத்தும் இருந்தால் மாத்திரமே நீ தமிழன்…
– சுப்ரமணிய பிரபா