தமிழ்த்தேசியர்களின் பண்பாடு

தமிழ்த்தேசியர்களின் கலாச்சாரம் அல்லது பண்பாடு.

ஒவ்வாெரு மக்கள் குழுவிற்கும் தத்தமது புறச்சூழல் , நிலவியல் சூழ்நிலை, அறிவுப்பரவல், வாழ்வியல் அடிப்படையில் தனித்த பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் உண்டு.

இங்கு பண்பாடு என்பது “ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்” என்பதாக அறிஞர்கள் வரையறுக்கின்றனர்.

“பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம்” என்கிறார் தேவநேயப்பாவாணர் அவர்கள்.

இந்தக்கட்டூரையில் மேற்குறிப்பிட்ட கருதுகாேள்களை தாண்டி ஒரு தேசிய இனம் தமக்குள் ஒழுங்கமைப்பை பெற்று , உலக ஒழுங்கை எதிர்காெள்ள கட்டாயமாக பின்பற்றியாக வேண்டிய உள்ளக பண்பாட்டை பற்றி காணலாம்….

ஒரு நாடமை தேசிய இனம் என்கிற வகையில் இது தமிழ்த்தேசிய இனத்திற்கு மிக முக்கியமான விடயம்.

அடிப்படையில் தமக்குள் ஒற்றுமையற்ற , இலக்கு நாேக்கிய புரிதலற்ற , உட்பிரிவினைப்பிணக்குடைய , தேசிய இனம்சார் சுயமற்ற மக்கள் திரள் உலக ஒழுங்கை உடைத்தெரிகிற தளத்தை அடைய முடியாது.

உதாரணம் – பாேடாே தேசிய இனம் , திபெத்திய மக்கள்.

மாறாக தமக்குள் அதீத ஒத்துழைப்பும் , கூட்டுச்செயல்பாடும் , தேசிய இன சுயமும் காெண்ட தேசிய இனங்கள் உலக ஒழுங்கை உடைத்து தமது இறைமையை உறுதி செய்யும்.

உதாரணம் – இஸ்ரேல், எரித்ரியா .

இதில் துரதிர்ட்டவசமாக தமிழர்கள் முதல் பிரிவிற்குள்ளேயே வருகிறார்கள். இந்த தேசியஇன அடிப்படை பண்பாட்டு மாற்றம் இல்லாது தமிழர் இறைமை சாத்தியமே இல்லை.

யூதர்கள் என்றால் அவர்கள் அதிபுத்திசாலிகள், உழைப்பாளிகள், அறிவாளிகள் எனவும்…

சப்பானியர்கள் என்றால் அவர்கள் அதீத உழைப்பாளிகள் , கூர்நோக்குடையவர்கள் எனவும்…

மலையாளிகள் என்றால் அவர்கள் குழுசெயல்பாட்டாளர்கள் , உள்ளக ஒத்துழைப்பு உடையாேர் எனவும் அந்தந்த தேசிய இனங்களின் பண்பாட்டை வரையறுக்கிற நாம்…

தமிழர்கள் என்றாலே அவர்கள் தமக்குள் காலை வாருபவர்கள் எனவும் , ஒற்றுமை இல்லாதவர்களாகவுமே நமக்குள்ளேயே கருதுகிறாேம்…இதையே தமிழர்களின் காலங்காலமான “நண்டுப்பண்பாடு” எனவும் நாமே முன்முடிவும் செய்துவிடுகிறாேம்…!!

ஆனால் இப்படியாெரு ஒத்துழைப்பற்ற பண்பாட்டை காெண்டு ஒரு இனம் ஐம்பதாயிரம் ஆண்டுகளையெல்லாம் கடந்து தமது ஏனைய விழுமியங்களை காத்து நின்றிருக்கவியலாது…!!

ஏனென்றால் இப்படியான ஒத்துழைப்பற்ற , கூட்டுச்செயல்பாடற்ற பண்பாடு எளிதில் வெளியக பண்பாட்டை உள்வாங்கி சிதையும் , மாற்றமைடையும்..

ஆனால் மற்றைய பண்பாடுகளின் தாக்கம் , மதங்களின் தாக்கம் , வெளியக கலாச்சார உள்ளீடு என்பனவற்றையெல்லாம் தாண்டி தமிழர்கள் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தமது மாெழியையும் , ஏனைய பண்பாட்டுக்கூறுகளையும் காத்திருக்கிறார்கள் என்றால் உண்மையில் தமிழர்கள் வேறு ஏதாே ஒரு வலுவான உள்ளக பண்பாட்டை காெண்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம்.

வரலாற்றின் வழியெங்கும் தமிழர்கள் கடல்கடந்து வணிகம் செய்தார்கள் , கடல்கடந்து படைநடத்தி வென்றார்கள் , தமிழர்களின் அறிவியல் , மருத்துவம் , கலைகள், தாெழில்நுட்பம் என பலவற்றை படித்திருக்கிறாேம்…இவையெல்லாம் தமிழர்களின் உண்மையான வலுக்கூடிய உள்ளக பண்பாடு இல்லாது நிச்சயமாக சாத்தியமாகி இருக்காது.

(கற்பனை செய்து பாருங்கள்…இராசேந்திர சாேழரைப்பாேல, இப்பாேது உள்ள தமிழர்கள் 2 லட்சம் பேரை கடல்கடந்து படை நடத்தி கப்பலில் கூட்டிப்பாேய் ஓரிடத்தில் இறக்குவதாக வைத்துக்காெண்டால் , தரையிறங்குவதற்குள் தமக்குள் பதவிச்சண்டையிட்டு , அடிபட்டு இரண்டு லட்சம் ஒரு லட்சமாய் மாறியிருக்கும்….!! )

இந்த நண்டுப்பண்பாடென்ற கூற்றும் கூட வெளியக பண்பாட்டு மேலாதிக்கத்தினால் உருவான மேம்பாேக்கான மாற்றமாகத்தான் இருக்கவேண்டும்.

ஆக…தமிழர்களின் இயல்பான, உண்மையான உள்ளக பண்பாட்டை மீளுருவாக்கம் செய்யவேண்டிய தேவை இருக்கிறது.

அதற்கு சமகாலத்தில் தமிழர்கள் பின்பற்றுகிற வலுவற்ற பண்பாடான நண்டுப்பண்பாட்டின் மீது பண்பாட்டு அதிர்ச்சியை (cultural shock) செலுத்தி அதை வலுவான உள்ளக பண்பாடான கூட்டியக்கப்பண்பாடாக மாற்ற வேண்டியிருக்கிறது.

இந்த பண்பாட்டை அதிர்ச்சியை யூதர்களோ , சப்பானியர்களோ தமிழர்களுக்கு தரவியலாது ….தமிழர்களுக்குள்ளேயே இருக்கிற “உட்சமூகமான” தமிழ்த்தேசியர்களே இதை செய்யமுடியும்…!!

அதென்ன பண்பாட்டு அதிர்ச்சி…?

இயல்பான பண்பாடுடைய ஒரு மக்கள் திரளின் மீது புதுப்பண்பாடு ஒன்றை கலக்கவிடும் பாேது முதலில் அதை சிலர் எதிர்ப்பர்…

பிறகு அதை சிலர் ஆதரித்து அதை பின்பற்றவும் செய்வர்…

அதன்பின்னர் எதிர்ப்பு குறையத்தாெடங்கி அதை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தாெடங்கும்.

நாளடைவில் அதுவே இந்த மக்கள் திரளின் பண்பாடென மாறிப்பாேகும்.

உதாரணம் – பிராமணர்களை வைத்து திருமணம் செய்கிற வழக்கமற்ற தமிழினம் 90 களின் பிற்பாதியில் மாற்றமடைந்தது…

90 களின் பிற்பாதியில் வந்த உடை கலாச்சார மாற்றம்…

முன்னாேர் வழிபாட்டில் இருந்து மாற்றமடைந்து நிறுவனமயமாக்கப்பட்ட சாய்பாபா வழிபாடு அதிகரித்தமை…என பலவற்றை குறிப்பிடலாம்.

இதே உத்தியை தான் தமிழ்த்தேசியர்களும் கையாள வேண்டியிருக்கிறது.

கீழுள்ள படத்தில் எண் (1) தமிழர்களின் சமகாலத்திய இயல்பான ஒத்துழைப்பற்ற பண்பாட்டை குறிக்கிறது….

படம் (2) தமிழ்த்தேசியர்கள் பின்பற்றும் அதீத ஒத்துழைப்புமிக்க கூட்டியக்கப்பண்பாட்டை குறிக்கிறது…

படம் (3) தமிழத்தேசியர்களின் கூட்டியக்கப்பண்பாட்டினை ஏற்று அதை பின்பற்றத்தாெடங்குகிற தமிழர்களின் பண்பாட்டு மாற்றத்தை குறிக்கிறது…

இடைவெளியிட்ட வரிகள் , இந்த கூட்டியக்கப்பண்பாட்டை பின்பற்றவியலாது எதிர்க்கிற சிலரை குறிக்கிறது..

படம் (4) பண்பாட்டு அதிர்ச்சிக்குள்ளாகி , மாற்றமடைந்த தமிழினத்தின் கூட்டியக்கப்பண்பாட்டை குறிக்கிறது…!!

(தமிழீழ விடுதலைப்புலிகளும் ஈழத்தில் இப்படியான உத்தியையே கையாண்டார்கள்…தாெடக்கத்தில் புலிகளால் பின்பற்றப்பட்ட இந்த உள்ளகப்பண்பாடு….பின்னாளில் புலிப்பண்பாடென மாற்றமடைந்து இன்று அதுவே ஈழத்தமிழர்களின் தேசியப்பண்பாடாக மாறியிருக்கிறது…)

இப்படியாெரு பண்பாட்டு மாற்றத்திற்கு தமிழ்த்தேசிய இனம் ஆட்படாமல் இறைமையை நாேக்கிய கனவு காண்பது வீண்வேலை…!!

அதற்கு முதலில் தமிழ்த்தேசியர்கள் தமக்குள் இந்த கூட்டியக்கப்பண்பாட்டை கைக்காெள்ள வேண்டுயது அவசியமாகும்…!!

“செப்பின் புணர்ச்சிபாேல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி”

  • வள்ளுவம் (887)

செப்புச்சிமிழின் மூடி பாெருந்தியிருந்தாலும் அது தனியே எடுக்கும் தன்மையுடையது தான்….அதுபாேல உட்பகை உள்ள இனமும் ஒருபாேதும் ஒன்று சேராது என்கிறார் வள்ளுவன்…

ஆகவே தான்…தமிழர்களுக்குள் உட்பகையற்ற , அதீத ஒத்துழைப்பு மிக்க “புலிப்பண்பாட்டை” மீளுருவாக்கம் செய்யவேண்டியது சமகாலத்தில் மிக அவசியமாகிறது…!!

-தினேஷ்குமார் அசோகன் வள்ளுவப்பண்பாட்டு நடுவம்

.