ஜூலை 23

இந்த நாள் சொன்னோனே எல்லாரோட மைன்ட்ல வரது நடிகர் சூர்யா வோட பிறந்தநாள்.
ஆனா திருநெல்வேலி மக்களுக்கு நினைவுக்கு வரது தாமிரபரணி படுகொலை.

தமிழ்நாட்டில் காவல்துறையினரின் வெறியாட்டம் ஒன்னும் Sterlite, சாத்தான்குளம் னு இப்ப நடந்துட்டு வர விஷயம் இல்ல. காலம் காலமாக இது நடந்துட்டு வருது. அப்படி நடந்த ஒரு சம்பவம் தான் தாமிரபரணி படுகொலை.

மாஞ்சோலை டீ எஸ்டேட்டில் வேலை பார்க்கும் பெரும்பாலான மக்கள் அப்போது பட்டியிலின சாதிகளை ( scheduled caste) சேர்ந்த மக்களாக இருந்தனர்.

அவர்களுக்கு ஒரு நாள் கூலி ₹75.

ஒரு நாளைக்கு 75 ரூபாய வச்சு கண்டிப்பா குடும்பம் நடத்த முடியாது.

இதுல 8 மணி நேர வேலை. பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் லீவு இல்ல.

சரி அதுக்கப்புறம் வீட்டுக்கு போனா கூட சாயங்காலம் தோட்டம் ஏதாச்சு போட்டோம்னா, அதுல நாலு காசு பாக்கலாம். ஆனா அதுக்கும் எஸ்டேட் owner கள் விடல. இதுலயும் அவன் பட்டியலின சாதியை சேர்ந்தவனாக இருந்தால் அவனை நைட்டு முழுக்க வேலை வாங்கி தன்னுடைய farm ல ஓரமா இருந்த ஓட்ட ஒழுங்கின வீட்ல தங்க சொன்னாங்க. இந்த கொடுமை பெண்களுக்கு அதிகமாவே இருந்துச்சு.

இதை கண்டிச்சு போராட்டம் பன்னவங்கள போலீஸ் arrest பன்னி போய் வச்சிட்டாங்க.

இத கண்டிச்சு மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்னுகூடி திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் வரை ஒரு ஊர்வலம் போனாங்க.

அப்போ திடீர்னு அங்க இருந்த காவல் துறையினர் அந்த மக்கள் மீது தடியடி ( lathi charge) நடத்த ஆரமிச்சாங்க.

ஒரு பக்கம் ஒரு கரை. நடுல தாமிரபரணி ஆறு. கரையில இருந்த மக்கள அடிச்சு தண்ணிக்குள்ள தள்ளுனாங்க.

இப்போ அந்த பக்கமும் போலிஸ் வந்துட்டாங்க.

நடுல தண்ணிக்குள்ள மக்கள். 2 கரையிலும் போலிஸ்.

அடுத்த நாள் தலைப்பு செய்தி,

“திருநெல்வேலியில் ஏற்பட்ட கலவரத்தில் 11 தொழிலாளிகள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். ஒரு சிலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” ன்னு.

உங்களுக்கே புரிஞ்சிருக்கும். என்ன நடந்தது என்று.

இன்னும் கொஞ்ச நாள்ல இந்த இறப்பு விகிதம் அதிகமாகி 17 பேர் ஆனது.

ரத்தினமேரி னு ஒரு இளம்பெண், அவருக்கு அப்போ தான் கலியாணம் ஆகி ஒரு குட்டி குழந்தை இருக்கு. அந்த குழந்தையோட, ரத்தினமேரியும் அவங்க அம்மாவும் போராட்டத்துக்கு வராங்க.

அப்போ ரத்தினமேரி அம்மாவையும் அந்த குட்டி குழந்தையையும் போலிஸ் அடிக்கிறாங்க. அந்த குழந்தை செத்து போகுது. அந்த அம்மா மயக்கம் போட்டு தண்ணிக்குள்ள விழறாங்க. ரத்தினமேரி அவளோட குழந்தைய தேடி அங்கயும் இங்கயும் போயிகிட்டு இருக்கப்ப, ரத்தினமேரியோட தலையிலேயே லத்தி வைத்து ஒரு அடி அடிச்சு லத்தியாலே தலைய தண்ணிக்குள்ள தள்ளி கொல்றாங்க. அடுத்த நாள் தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களின் பட்டியலில் ரத்தினமேரியும் அவளோட இளம்குழந்தையும் சேர்க்கப்படுது.

அவங்க அம்மாவ அந்த ஊர் மக்கள் காப்பாத்தி பிழைக்க வச்சிடறாங்க. பிழைத்து இரண்டு நாள் கழித்து அந்த அம்மாக்கு தெரியவருது, தன் மகளும், பேரனும் இறந்துட்டாங்கனு.

அதுக்கு அந்த அம்மா, என்ன ஏன் காப்பாத்துனிங்கனு அழுவறாங்க…

ஒரு கணவனை இழந்த மனைவி சொல்றாங்க,

” நாங்க ரெண்டு பேரும் தான் போனோம். திடீர்னு போலிஸ் அடிக்க ஆரமிச்சிடாங்க. என்ன பன்றதுனே தெரியாம மொத்த சனகூட்டமும் தண்ணிக்குள்ள போக ஆரமிச்சிருச்சு. நாங்களும் போயிட்டோம். கடசில ரெண்டு பக்கமும் போலீஸ் வராங்க. எல்லா தண்ணிக்குள்ள போக ஆரமிச்சிடாங்க. அப்போ என் கையிலயே ஒருத்தன் அடிச்சு ஏன்டி தேவிடியா உனக்குலா கொடிய பிடிச்சிட்டு போராட்டம் கேக்குதானு பூட்ஸ் காலாலயே என்ன எட்டி உதச்சான். நான் கீழ விழுந்து அப்றம் ஒருத்தர் என்ன கையபுடிச்சி வேற பக்கமா கர ஏத்திவிட்டாரு. எம் புருசன அடிச்சே கொன்னுட்டாங்க ” னு அழறாங்க.

(Source – தினமணி)

மறுநாள் அத்தனை பொணத்தையும் அரசாங்கமே அடக்கம் பன்னிட்டாங்க

ஆனா எங்க அடக்கம் பன்னுச்சுனு எனக்கு தெரியாது

எங்க அம்மா அக்காக்கு அவன் செத்துட்டானு கூட தெரியாது.

மறுநாள் பேப்பர்ல எந்தெந்த உடல எங்க அடக்கம் பன்னிருக்கோம்னு அரசாங்கமே ஒரி அறிவிப்பு வெளியிட்டுச்சு.

திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி போற ரோட்ல ரோஸ்மேரி காலேஜ் க்கு அந்த பக்கம் கண்டித்தான்குளம் னு நாங்க அதுவரை கேள்வியேபடாத அந்த ஊர்ல அவன புதைச்சிருந்தாங்க.

அம்மாவையும் அக்காவையும் அங்க கூட்டிட்டு போயி குமாரு இறந்துட்டானு அவன் சவகுழிய ஒரு அண்ணனா நானே காட்டுனது எவ்ளோ பெரிய கொடுமை தெரியுமா ?

அதை என்னால ஆயுசுக்கும் மறக்க முடியாது.

மறக்கவே நினைக்கிறேன்!

( பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ்)

இது குறித்து ஒரு நதியின் மரணம் னு ஒரு documentary படமே வந்துள்ளது.

அந்த 17 பேரின் ஓல ஒலி இன்றும் தாமிரபரணி ஆற்றில் ஒலித்துகொண்டு தான் இருக்கிறது.

அந்த இரத்தகரை இன்னும் தாமிரபரணி ஆற்றங்கரையில் படிந்து கொண்டிருக்கும்.

யாருக்கு தெரியும்

உரிமைக்காக உயிர் நீந்த அந்த உயிர்களின் தூய ஆன்மா இன்றும் தாமிரபரணியில் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருக்கும்.

அவர்களின் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிராத்திப்போம்.

கனத்த இதயத்துடன்,

நன்றி வணக்கம்🙏

நம்புங்க நாம 1947 லயே சுதந்திரம் வாங்கிட்டோம்.