தமிழ்மொழியின் தனி சிறப்பை அறிந்துள்ளீர்களா?

119

உலகில் இப்போது இருக்கும் மொழிகளில் பழமையான மொழி தமிழ்மொழி. இந்த மொழியின் காலம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

தமிழ்மொழி எழுத்து வடிவங்களை அடிப்படையாக கொண்ட மொழி அல்ல. தமிழ்மொழியின் கட்டமைப்பே ஒலி வடிவம் தான்.

தமிழ்மொழியின் கட்டமைப்பு வியப்பானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இவ்வளவு நுட்பமாக தமிழ்மொழியை கட்டமைத்துள்ளனர் என்பதை பார்ப்போம்.

உயிர் என்றால் என்ன?
மெய்(உடல்) என்றால் என்ன?

ஒரு நபர் இறந்து விட்டார். அவரது உடலை புதைக்க எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஏன் அவரது உடலை புதைக்கிறார்கள் என்று சிந்தித்தீர்களா.

இரண்டு கை, இரண்டு கால், தலை , நெஞ்சு என அந்த உடலில் இருந்தும் ஏன் அது தேவையில்லை என புதைக்கிறார்கள்.

ஏன் என்றால் அந்த உடலில் உயிர் இல்லை.

“உயிர்” இல்லை என்றால் அந்த உடல் இயங்காது.
அப்படியானால் ஒரு உடலுக்கு ( தமிழ்மொழியில் உடல் என்றால் “மெய்” என்று பொருள்),
உடலின் இயக்கத்திற்கு “உயிர்” தேவைப்படுகிறது.

எனவே ஒரு மனித வாழ்வியல் என்பது உடல்(மெய்) மற்றும் உயிர் இயக்கத்தை கொண்டது.

நமது தமிழ்மொழியும்
“உடல்(மெய்)” மற்றும் “உயிர்” இயக்கத்தை அடிப்படையாக கொண்டது.

உயிர் இருக்கிறாதா என்றால் அந்த உடலில் மூச்சு இருக்க வேண்டும். மூச்சு என்பது காற்று மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் சென்று உயிர் ஆற்றலை உருவாக்கி உடலை இயக்குகிறது.

தமிழ்மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள் 12 ம் காற்றை அடிப்படையாக கொண்டவை.
நுரையீரலில் உள்ள(நெஞ்சில் உள்ள) அதே காற்று வாய் வழியாக தடைபடாமல் வெளியேறுகிறபோது 12 உயிர் எழுத்துக்களும் பிறக்கின்றன.

உயிர் எழுத்துக்கள் உருவாகும்போது நாக்கு, உதடு முதலிய உறுப்புகள் எதுவும் வெறியேறும் அந்த காற்றை தடுக்காது.
ஒரு உடல் இயங்குவதற்கு உயிர் எப்படி முக்கிமோ அதுபோல மெய்எழுத்துக்கள் இயங்குவதற்கும் உயிர் எழுத்துக்கள் முக்கியம்.

மெய்யெழுத்துக்கள் 18
மெய்யெழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் இல்லாமல் இயங்காது.
(உடல் உயிர் இல்லாமல் இயங்காதது போல)
உயிர் எழுத்துக்கள் மெய்யெழுத்துகளோடு சேர்கிறபோது உயிர் மெய் எழுத்துக்கள் (216) தோன்றும்.
( எடுத்துக்காட்டாக: ம் + ஆ = மா )

ஒரு உடலின் இயக்கத்தில் கால் இருக்கிறது, கை இருக்கிறது, தலை இருக்கிறது , உயிர் எங்கே இருக்கிறது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்.

அது மறைந்து உடலின் இயக்கத்தில் இருப்பதைப்போல
உயிர் மெய் எழுத்திலும்
உயிர் எழுத்து மறைந்து இருக்கும்.

எடுத்துக்காட்டாக “மா” என்ற எழுத்தில் “ஆ” என்ற உயிர் எழுத்து எங்கே இருக்கிறது என்று கேட்டால் – உடலில் உயிர் மறைந்திருப்பதை போல மறைந்துள்ளது.

இந்த தமிழ்மொழியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிய தமிழர்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்துள்ளனர்.
மேலே சொன்னது ஒரு துளி தான் .
தமிழ் மொழி நுட்பமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய மொழி.

தமிழ்மொழியை கற்போம்
“தமிழன்” என்பதில் பெருமை கொள்வோம்.

– புகழேந்தி