இதோ தோளில் மூட்டையை சுமந்து வருகிறாரே இவர் ஒரு தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ என்றால் நம்ப முடிகிறதா?
இவர் பெயர் சீதாக்கா. முன்னாள் மாவோயிஸ்ட் போராளியான இவர் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ
இந்த கொரோனோ நெருக்கடியில் தன் மக்களுக்காக கற்கள் நிறைந்த மலைப் பாதையில் பொருட்களை சுமந்து செல்கிறார்.
ஈழத்து தமிழ் மக்களுக்கும் இப்படி உதவுவதற்காக ஒரு அக்காவை எமது சுமந்திரன் அழைத்து வந்தார்.
அவர் பெயர் அம்பிகா. தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்தவர் கொரோனோ என்றதும் அடுத்த நிமிடம் கொழும்புக்கு பறந்துவிட்டார்.
இப்பவே மக்கள் பற்றி அக்கறை கொள்ளாத இவர் பதவி பெற்றபின் மக்களில் அக்கறை கொள்வார் என்று எப்படி நம்புவது?
பரவாயில்லை. ஆனால் இந்த அம்பிகா அக்காவைத்தான் எப்படியும் தேசிய பட்டியல் மூலமாவது எம்.பி யாக்க வேண்டும் என்று சுமந்திரன் அடம் பிடிக்கிறார்.
சரி. அதை விடுவோம். இந்தியாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்கள் தம் சொந்த இடங்களுக்கு திரும்பும் பயணச் செலவை வழங்க முன்வந்துள்ளது.
ஆனால் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள பாராளுமன்றத்தை கூட்டினால்தான் வருவோம். பிரதமர் கூப்பிட்டால் வரமாட்டோம் என்று அடம்பிடிக்கின்றன.
ஆனால் நல்லவேளை எமது சம்பந்தர் ஐயா இப்படி எந்த அடமும் பிடிக்காமல் கலந்து கொண்டுள்ளார்.
கலந்துகொண்டு தமிழ் மக்களுக்காக என்ன சாதித்தார் என்று தயவு செய்து யாரும் என்னிடம் கேட்காதீர்கள்.
அவர் வழக்கம்போல் தனது நீண்ட உறக்கத்தில் இருக்கும் கடமையைச் செய்து முடித்தள்ளார். இது போதாதா?
நாங்கள் சீதாக்காவை நினைத்து பெருமூச்சுதான் விட முடியும். எம் தலைவிதி அப்படி.
குறிப்பு- லண்டனில் சொகுசாக இருக்கும் பாலன் தோழர் வந்து மக்களுக்கு சேவை செய்யலாம்தானே என்று கருத்து எழுதப்போகும் சுமந்திரன் விசுவாசிகளுக்கு முதலே கூறிவைக்க விரும்புகிறேன். நான் எம்.பி யும் இல்லை. எம்.பி பதவிக்காக போட்டியிடவும் இல்லை.