சுமந்திரன் உட்பட கூட்டமைப்பை முழுமையாக நிராகரியுங்கள் – தமிழக தலைவர்கள் கூட்டாக கோரிக்கை

181

சுமந்திரன்,கூட்டமைப்பு மீதான

தமிழக அமைப்புகளின் எதிர்ப்பின் அர்த்தம் என்ன?

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தே முதன் முதலில் சுமந்திரன் மீதான எதிர்ப்பு ஆரம்பித்தது.

அதன் பின்னர் ஈழத்தில் காணாமல்போன உறவுகள் போன்ற அமைப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஆரம்பித்தன.

அடுத்து இப்போது சொந்த கட்சிக்குள்ளே இருந்தும் பங்காளிக் கட்சிகளிடமிருந்தும் சுமந்திரன் எதிர்ப்புகளை சந்திக்கிறார்.

ஆனால் இவை எல்லாம் ஈழத் தமிழர்கள் ஈழத் தமிழரான சுமந்திரனை எதிர்ப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.

அதேவேளை தமிழக அமைப்புகளிடமிருந்து வரும் சுமந்திரன் எதிர்ப்புகள் ஆச்சரியம் தருகின்றன.

ஏனெனில் இதுவரை தமிழக அமைப்புகள் எவையும் இவ்வாறு பகிரங்கமாக தேர்தலில் தங்கள் கருத்தை கூறியதில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமிழர்நல பேரியக்க தலைவர் இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் சுமந்திரன் உருவப் பொம்மையை தமிழகத்தில் எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இப்போது இன்னொரு தமிழ் அமைப்பு தலைவரான இயக்குனர் கௌதமன் அவர்கள் சுமந்திரன் பேச்சை நம்ப வேண்டாம் என்றும் அவரை நிராகரிக்கும்படியும் ஈழத் தமிழ் மக்களை கேட்டுள்ளார்.

அதைவிட, நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் சுமந்திரன் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பையே நிராகரிக்கும்படி தமிழ் மக்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இவற்றை நோக்கும்போது இவை வெறும் சுமந்திரன் எதிர்ப்புகளாக மட்டும் அடக்கி புரிந்துகொள்ள முடியாது.

மாறாக, ஆதரவு வழங்கல் என்ற நிலையில் இருந்து சேர்ந்து பங்களித்தல் என்ற நிலைக்கு தமிழக அமைப்புகள் நகர்கின்றன என்பதையே முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும்.

சுமந்திரன் எதிர்ப்பில் விளைந்துள்ள நன்மைகளில் இது முக்கியமானது.

தோழர் பாலன்