தமிழீழ நடைமுறை அரசினை நிர்வகித்த நம்மவர்கள்..

97

“கல்வியே எங்கள் மூலதனம் அதில் கத்தி வைக்கிறது ஆளுமினம்”

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழீழ நடைமுறை அரசினை நிர்வகித்த நம்மவர்கள்

ஊருக்கு ஊர் “படிப்பகங்களை” அமைத்திருந்தனர்!

“#படிப்பகங்கள்” வடக்கு கிழக்கில் நடைமுறையரசின் கட்டுப்பாட்டிலிருந்த அனேக இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.

“மாவீரர் படிப்பகம்”எனும் பெயரினை அறியாதவர்கள் என அந்தக் காலத்தில் யாரும் இருக்க முடியாது.

கிளிநொச்சி மாநகரின்

திருவையாறு கிராமத்தில் “சங்கர் படிப்பகம்” அமைந்திருந்தது

கா.பொ.த சாதாரண தரம் மற்றும் கா.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்தும் நோக்கங்களையும் இந்தப் “படிப்பகங்கள்” நிறைவு செய்திருந்தன.

கடந்த கால வினாத்தாள்கள் அடங்கிய பொத்தகங்களை யாழ் நகரிலும் கொழும்பிலும் வாங்கி வந்து கிராமப்புற

படிப்பகங்களிலும் நூலகங்களிலும்

வைக்கப்பட்டிருந்தன.

நடைமுறையரசினை நிர்வகித்த நம்மவர்கள் “அறிவியல் கழகங்களை”உருவாக்கி மாணவர்கள் கற்றல்,கற்பித்தல் 📕நடவடிக்கையில் ஈடுபட வழிசமைத்தனர்.

யாழ் இணுவில் கிராமத்தில் “#அறிவியல்_கழகம்” அமைக்கப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே.

இலங்கை அரசினால் ,எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான தடைகள்(Severe economic embargo) மேற்கொள்ளப்பட்டுருந்த இக்கட்டான சூழல் மத்தியிலும் இயன்றளவு வசதிகளுடன் அந்த அறிவியல் கழகம் அமைக்கப்பட்டிருந்தது.

மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு காரணமாக குப்பி விளக்கையோ அல்லது #பஞ்சகால_பஞ்சு விளக்கைக் கூட வீட்டில் பாவிக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த காலத்தில் மாணவர்களுக்கு அருகே அருமருந்தாய் தமிழீழ நடைமுறையரசு இருந்தது.

மின்பிறபாக்கி(Generator)மூலம் அந்த அறிவியல் கழகங்களில்

ஒளியேற்றப்பட்டு மின்னொளியில் மாணவர்களை படிக்க ஊக்கப்படுத்திய சம்பவங்கள் நடைபெற்றிருந்தன

சின்னச் சின்ன பரிசோதனைகள் கூடச் செய்யக் கூடியதாக சில ஆய்வுகூட வசதிகளும் அங்கே அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன.

“கல்வி வளர்ச்சிக் கழகம்” என்பது இன்னுமோர் இன்னோரன்ன கல்வி நிலையங்களாக வடதமிழீழத்தில் அனேக இடங்களில் அன்று அமைக்கப்பட்டிருந்தது.

எனக்கு தெரிந்த வகையில் யாழ் அச்சுவேலியில் 1986 ஆம் ஆண்டு கல்வி வளர்ச்சிக்கழகம் தனது பணியினை திறம்பட ஆற்றியது.

இடையில் இமய நாட்டுப் படைகளின் வருகையுடன் இயங்கமுடியாமல் போனதாயினும் 90களில் மீண்டும் மிடுக்குடன் அனேகமாக எல்லா இடங் களிலும் ஆரம்பிக்கப்ப்ட்டது.

நகர்ப்புறங்களின் பிரபல பாடசாலை மற்றும் பிரபல ரீயூட்டரிகளில் கல்வி போதிக்கும் நல்லாசான்களை குக்கிராமங்களுக்கு அழைத்துவந்து மாலை நேர இலவசக் கல்வியூட்டல் நடைபெற்றது.

எரிபொருளுக்கும் சவர்க்காரத்துக்கும் கற்பூரத்துக்கும் சொக்கலேட்ட்டுக்கும்(கன்ரோஷ்) மட்டுமல்ல கட்டடப் பொருட்களுக்கும் தடையிருந்தது.

அக்காலப்பகுதியில் சீமெந்துக்கும் கடுமையான தடையை இலங்கை அரசு விதித்திருந்த நேரத்தில் வடகிழக்கில் புதிதாய் ஒரு சிறுகட்டடம் கூட எம்மண்ணில் எழுந்திட முடியாதிருந்தது.

ஆனாலும் நல்லூரில் அன்று #இளங்கலைஞர் மன்றம் அமைக்கப்பட்ட போது அதற்கு கப்பல்கள் மூலம் வெளிநாட்டிலிருந்து இறக்கிய சீமெந்தை நடைமுறையரசு வழங்கியிருந்தது.

இஷ்ரேல் போன்ற வல்லரசு நாடுகளில் இருந்து ஶ்ரீலங்கா அரசு பெற்றுக் கொண்ட அதிவேக,அதிக தாக்கம் கொண்ட குண்டுவீச்சு விமானங்களின் குண்டுவீச்சிலிருந்து பாதுகாப்புத் தேடவேண்டியிருந்தது.

அந்தக்காலத்தில் நிலக்கீழ் வைத்தியசாலைகளை அமைப்பதற்கு பயன்படவிருந்த சீமைந்தினை இளங்கலைஞர் மன்றம் அமைப்பதற்காக தமிழீழ அரசினால் கொடுக்கப்பட்டிருந்தது.

எமது மண்ணில் மலரும் மொட்டுக்கள் கலையாத ஞானம் கொண்டு விளங்க வேண்டும் என்ற தீராத ஆசை தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருந்தது.

ஆனால் இன்று

அறிவுஜீவிகள் என தமை அடையாளப்படுத்தும் சிலர் அவை அனைத்தையும் மறந்துவிட்டனர்.

புலிகளால்தான் வடகிழக்கின் கல்வி வீழ்ச்சி அடைந்ததாய் புலம்புகின்றனர்.

அவர்களுக்கு ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆசியும் அடுத்த கட்ட பதவியுயர்வும் தேவைதான் அதற்காய் அனைத்தையும் மறந்ததாய் நாடகம் ஆடக்கூடாது.

“வரலாறு என்றைக்கும் சாகாது வழிநடத்தும்”

நன்றி மருத்துவர் தணிகை

Tharshan