விலைமதிப்பற்றது தாயின் கண்ணீா்

103

பத்து ஆண்டுகள் கடந்த சென்றாலும் தாயின் மனதில் பிள்ளைகள்
என்றும் பிள்ளைகளே..!
தாயே உன் கண்ணீா்
விலைமதிப்பற்றது…!
தாயே உன் வேதணையை
இங்கு எந்த அமைப்பும்
கண்டுகொள்ளாது
ஏன் என்றால்
நீ எம் தமிழ் தாயல்லவா..!
தாயே உன் கதறலை
யாரும் கண்டு கொள்ள மாட்டாா்கள்
நீ எம் இனத்தின் வீரத்தாயல்லவா…!
அம்மா உன் கண்ணீரின்
வலி எனக்கு புரிகிறது
நான் உன் மகள் அல்லவா….!
அம்மா உன் வலியின் கொரூரத்தை
உன் கண்கள் கூறுதம்மா…!
தாயே உன் விழியில் கசியும்
நீரின் வலியை
நான் நன்கு அறிவேன்..!
உன் குழந்தைகள் எங்கு
இருந்தாலும் உன்னிடம்
வந்திடனும்…!
ஐ.நா சபையே இந்த
அழுகுரல் ஏன்
உன் காதுகளில்
இன்னும் கேட்கவில்லை…?
இந்த தாயின்
கண்ணீருக்கு எப்போது விடிவுகாலம்…?

க.பொம்மை