நீண்ட 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு போராட்டத்தின் முடிவு ஒரு சில நாட்களாக ஒரு சில வாரங்களாக என்ற நிலைமையில் இருந்த அந்த நாட்கள்.எனக்கு நான் காயப்பட்டு வெளியேறுவதற்கு முன் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் வெளியேறுவதற்கு எண்ணவில்லை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மாலை 4 மணி குண்டுச் சத்தங்கள் துப்பாக்கிகளும் இடைவிடாத சத்தங்கள் தான் அப்பொழுது அனைவருக்கும் நொடிப்பொழுதும் சொந்தமானது…
எனக்கு அறிமுகமான ஒரு மூத்த போராளி ஒருவர் என்னை அழைத்ததின் பேரில் அந்தப் பதுங்கு குழிக்குள் செல்கிறேன்.எனது காயத்தின் தன்மையை அறிந்து நலம் விசாரிக்கிறார் அப்படியான ஒரு சூழலில் இதற்கு முதல் அதிக முறை சந்தித்து உரையாடி இருந்தாலும் இந்த சந்திப்பு ஆரம்பத்தில் உரையாடுவதற்கு வார்த்தைகள் அளவோடு தான் இருந்தன…
நான் வேறு ஒரு இடத்திற்கு செல்வதற்குத் தான் பயணித்தேன்.அவரின் வேண்டுகோளை ஏற்று அன்று அங்கு தங்க வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது அவர் பிரிதொரு இடத்தில் இருந்து அங்கு தற்காலிகமாக வந்துள்ளார் என்பதை புரிந்து கொள்கிறேன்.சிலரின் உறக்கத்துக்கு பின் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது கடந்த கால உதவிகள் நான் செய்த பணிவிடைகள் காரணமாக அப்படியான ஒரு சூழலிலும் எனக்கு நன்றிகள் பரிமாறப்பட்டன…
தன்னுடைய போராட்ட வரலாற்றில் முடிவை அவர் அன்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.கிடைத்த சந்தர்ப்பங்களில் பின் கிடைக்கப்பெற்ற துரோகங்களை அவர் மறந்துவிடவில்லை.சில எதிர்பார்ப்புகள் ஈடுசெய்ய முடியவில்லை ஏமாற்றப்படுகிறோம் பட்டோம் என்பதை அவரின் வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொள்கிறேன்….
தன்னுடைய முடிவை அவர் முழுமையாக தீர்மானித்துக் கொண்டார்.ஆனால் பிறருடைய வாழ்வை தேவையை அவர்களின் எதிர்கால தேவையை உணர்ந்து இருப்பை உறுதி செய்வதற்கு அதிக முயற்சிகளை அப்பொழுது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அதற்கான முயற்சியை அதிகமாக உருவாக்குகிறார்…
அதற்கான முயற்சியில் அதிகமானவர்கள் ஈடுபடுகிறார்கள் அதற்கும் பலன் கிடைக்கவில்லை இலங்கை இந்தியா சர்வதேசம் முயற்சிகள் அனைத்தும் விடையில்லாத கேள்விகள் ஆகத்தான் இருந்தன அன்று ஆனால் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன…
அன்றைய எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழ்நாடு மூத்த அரசியல்வாதிகள் உட்பட இறுதிநேரத்தில் தன்னை பாதுகாப்பதை விட மக்களைப் பாதுகாப்பதற்கும் முயற்சி செய்யவில்லை என்ற ஒரு கடுமையான ஒரு ஆதங்கம் அவருக்கு இருந்தது முழுமையாக. போராட்டத்தில் முடிவை நமது அரசியல் தலைமைகள் எதிர்பார்க்கிறார்கள் மிகவும் ஆவலுடன் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதுவும் தன்னுடைய இறுதி முடிவை….
மக்கள் மற்றும் போராட்டம் சார்ந்தவர்கள் அதிகமானவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு முயற்சிகள் தோற்றுப் போகும் பொழுதும் கூட இருந்தும் அதிகமான முயற்சிகளை மேற்கொள்ளச் சொல்லி அடிக்கடி ஒரு தரம் கட்டளைகள் சென்று கொண்டுதான் இருக்கின்றன.நான் அறிந்தவரையில் தன்னை பாதுகாப்பதற்கான எந்த வழிமுறையையும் அவர் கையாளவில்லை பிறரை பாதுகாப்பதற்கான வழிமுறையை மட்டும்தான் அன்று அவர் அதிகம் அக்கறை கொண்டார் உரையாடல்கள் மூலம்….
கூறிய சில வரிகள்.எம்மைப் பாதுகாக்க தான் எமது அரசியல் தலைமைகள் முயற்சி செய்ய மாட்டார்கள் ஆனால் மக்கள் கொத்துக்கொத்தாக மரணிக்கும் போதும் அவர்களைக் காப்பாற்ற முயற்சி எடுக்காத இவர்கள் தானே இனியும் அரசியலை செய்யப்போகிறார்கள்.ஒருகாலத்தில் தமிழ்நாட்டுத் தலைவர்கள் எனக்கு அதிகமான ஆதரவு தந்தார்கள் ஆனால் அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைமையில் நாம் இருக்கிறோம் இன்று…
தனக்குப்பின் இனி அடுத்தது அரசியல் தான் தமிழரின் இருப்பு அதை கட்டியெழுப்ப வேண்டும் ஆனால் அன்றைய இருந்த தலைமைகள் முழுமையாக தவிர்த்து என்பதை புரிந்து கொண்டேன் அவரின் வரிகளிலிருந்து நான் நினைக்கிறேன் அதற்கான கட்டமைப்பை அவர் அந்த சந்தர்ப்பத்தில் உரையாடல்கள் மூலம் நிவர்த்தி செய்து இருக்கலாம் அவர்கள் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாமல் மரணித்துவிட்டார்கள் அரசியல் சார்ந்தவர்கள்….
அவரின் வார்த்தைகள் பிரகாரம் இறுதியில் சரணடைந்து மரணித்தவர்கள் ஒருவேளை இன்று இருந்திருந்தால் இன்று இந்தக் கூட்டமைப்பு அவர்கள் வழியில் பயணித்து இருக்கும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.அதிகமான அழைப்புகளின் ஊடாக தொடர்பு கொள்ள முடியாத ஒரு அரசியல் தலைமைகள் ஆகத்தான் அன்று அதிகமான கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.அவர்களின் நேரத்திற்கு காலத்திற்கு ஏற்ப தொடர்புகள் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது அன்று.அதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த மூத்தவர்களை ஒதுக்கி அதில் இருந்த அரசியலுக்கு புதியவர்கள் இளையவர்களை தொடர்பு கொண்ட நோக்கம்….