
சமாதானம் யாருக்கு தேவைப்பட்டது ஆம் முதலில் சமாதானம் என்ற ஒரு சிந்தனை விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தான் வந்தது.ஆனால் சமாதான நோக்கத்தை எதிர்பார்த்து அல்ல.தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டது.
காரணம் அதை சரியாக கணித்து இருந்தார். இலங்கை அரசு அன்றைய நேரத்தில் முற்றுமுழுதாக முடங்கிப் போய் இருந்தது மீண்டும் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற் கொள்வதில் இருந்து….
#இலங்கை அரசு மீண்டும் ஆனையிறவுப் படைத்தளத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்குடன் மிகவும் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். தீச்சுவாலை என்ற பெயரில் மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த சண்டை தோல்வியடைந்தது.தென்னிலங்கையில் பெரிய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. இராணுவ கட்டமைப்பு முற்றுமுழுதாக சோர்வடைந்து விட்டது.முக்கியமாக ராணுவ உயர்மட்ட அனைத்து அதிகாரிகளும் சோர்வடைந்து விட்டார்கள் இனி என்ன செய்வது இது ஒருபுறம்….
#தொடர்ச்சியாக கட்டுநாயக்கா விமான நிலையம் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உட்பட்டது.இந்த இரண்டு சம்பவங்களும் மீண்டும் விடுதலைப்புலிகள் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்வதற்கு கால எல்லை அற்றதாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இலங்கை அரசுக்கு.கட்டுநாயக்கா விமான நிலையம் தாக்கப்பட்டது இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு ஒரு கசப்பான வரலாற்று சம்பவத்தை இலங்கை மட்டத்தில் மட்டுமல்ல சர்வதேசத்தில் பதிவு செய்துவிட்டது அந்தத் தாக்குதல்.அதைவிட அன்று சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கான ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
#குறிப்பிட்ட காலத்துக்குள் இனி எந்தவித ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாத ஒரு நிலைமையில் இலங்கை அரசு அன்று இருந்தது.இதை நன்கு உணர்ந்த பிரபாகரன் தனது அடுத்த திட்டமிடலை மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளத் தொடங்கினார்.விடுதலைப் புலிகளாக இலங்கை அரசிடம் ஒரு யுத்த நிறுத்தத்தை எதிர்பார்த்து ஒருதலைப்பட்சமாக விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவிக்கிறார்கள்.எதற்காக இந்த யுத்த நிறுத்தம் ஏன் அறிவிக்கப்பட்டது….
#வன்னிப் பெருநிலப்பரப்பு இரண்டு துண்டுகளாக ஆகப்போகிறது என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த நேரத்தில் அவர்களின் கனவை சிதைத்து.
ஓயாத அலைகள் ஒன்று இராணுவ நடவடிக்கை மூலம் தொடர்நில மீட்புக்கான ஒரு போராட்டத்தை ஆரம்பித்து தமிழருக்குச் சொந்தமான இருந்த இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு கொண்டிருந்தது தொடர்ச்சியாக.எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்திற்கு ஒரு இடைவெளியை கொடுக்கக்கூடாது என்ற முடிவில் மிகவும் வேகமான முறையில் நிலத்தை மீட்கும் போராட்டத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் மிகவும் நேர்த்தியாக கையாண்டார்….
#தொடர் ஓயாத அலைகள் யாழ்குடாநாட்டை நோக்கியும் விடுதலைப்புலிகளின் நில மீட்புப் போராட்டம் தொடர்ந்தது.அது ஒரு கட்டத்தில் அரியாலை,கைதடி நீர்வேலி தரவை,கனகம் புளியடி,நாகர்கோவில், எழுதுமட்டுவாள், போன்ற பிரதேசங்கள் வரை சென்ற விடுதலைப் புலிகளால் அதற்குமேல் செல்வதற்கான கொண்டு செல்வதற்கான படை வலு காணாத ஒரு நிலை ஏற்பட்டது.முடிந்தவரை அரியாலையில் இருந்து எழுதுமட்டுவாள் வரை ஒரு இணைப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்தார்கள் கடுமையாக அந்த முயற்சி தோல்வி கண்டது….
#அன்றைய காலகட்டத்தில்.அதிகமாக மக்கள் சார்ந்த அமைப்புகள் யுத்த களத்தில் இறக்கப்பட்டனர்.எல்லைப்படை துணைப்படை ,கிராமிய படை, மாணவர் படை.புலிகளில் இருந்து விலகிச் சென்றவர்கள் அவர்களைக் கூட ஒன்று சேர்த்து ஒரு படையணி.இப்படி அதிகமான படைகளை உருவாக்கி அவர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமாக இருந்தது விடுதலைப்புலிகளுக்கு பின்புல செயல்பாடுகள் மட்டுமல்லாது களத்திலும் சண்டையிட்டார்கள்.எந்தெந்த வழிமுறைகளில் மக்களை கொண்டு போராட்டத்தை கொண்டு செல்ல முடியுமோ அத்தனை வழிமுறைகளையும் அன்று விடுதலைப் புலிகள் கையாண்டார்கள்….
#நான் மேலே குறிப்பிட்ட இடங்களிலிருந்து முன்னேறிச் செல்ல முடியாத நிலைமையில் விடுதலைப் புலிகளின் நிலமை இருந்தது..
பின்னர் ராணுவம் மீண்டும் தனது தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு பிரதேசங்களிலும் முறியடிப்பு சமர் மூலம் விடுதலைப் புலிகளின் சார்பில் அதிக அளவு இறப்புக்கள் உருவாக்கத் தொடங்கிவிட்டது.
முக்கியமாக அதில் போராளிகளை விட எல்லைப்படை துணைப்படை சார்ந்தவர்கள் அதிக உயிரிழப்பை சந்திக்க தொடங்கினார்கள்….
#இழப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக கைப்பற்றப்பட்ட அதிகமான பிரதேசங்களை விட்டு விடுதலைப் புலிகள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.இறுதியாக கிளாலி முகமாலை நாகர்கோவில் போன்ற பிரதேசங்களில் அரணை அமைத்து தற்காலிக சண்டை ஓய்வில் இருந்து அடுத்த கட்டத்தை நோக்கி காயை நகர்த்தத் தொடங்கினார் பிரபாகரன்…
#வன்னி எங்கும் பிரச்சாரம் மிகவும் கடுமையாக இருந்தது புதிய போராளிகளை இணைத்துக் கொள்வதற்கு.கிழக்கு மாகாணத்திலிருந்து போராளிகள் வன்னிக்கு வருகை தந்தார்கள் அதிகமாக.
வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் போன்ற ராணுவ பிரதேசங்களிலிருந்தும் இளைஞர்கள் அதிக அளவாக வரத் தொடங்கினார்கள் அமைப்பில் சேர்ந்து கொள்வதற்காக…
#இப்படியான சூழ்நிலையில் இருக்கும் போராளிகளை வைத்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்கினார் பிரபாகரன்.
அதற்கு அவருக்கு ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது.அப்பொழுது அவரால் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தம் இலங்கை அரசு மீது வைக்கப்பட்டது.ஒவ்வொரு மாதமும் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை நீடித்துக் கொண்டு செல்லும் அதே நேரத்தில்.அடுத்த சண்டைக்கான பயிற்சிகளை பல இடங்களில் மேற்கொள்ளத் தொடங்கினார்….
#அதிகளவு படையணிகளை உள்வாங்கி இயக்கச்சியில் வலது புறமாக சுண்டிக்குளம் பகுதியை நோக்கி செல்லும் இடத்திலிருந்த ஆர்பிஜி தோட்டம்.இதில் அன்றைய காலத்தில் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் வீரச்சாவடைந்த லெப்டினன் கேணல் தர்சன் அவர்களின் பெயரில் முதலாவது அடிப்படை பயிற்சி போராளிகள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.குட்டிசிறி மோட்டார் படையணிகான போராளிகள்.அவர்களை இப்பிரதேசத்தில் இருந்து பூநகரி பிரதேசத்திற்கு மாற்றி அமைத்து.இங்கு பத்துக்கு அதிகமான படையணிகளை உள்வாங்கி ஒரு தாக்குதலுக்கான பயிற்சிகள் வட போர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன் தலைமையில் தொடங்கியது…
#இதை கண்காணிக்கும் பொறுப்பு லெப்டினன்ட் கர்னல் லோரன்ஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இவர் அன்றைய காலத்தில் வட போர்முனை கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர்.சமகாலத்தில் இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் அங்கும் படையணிகள் ஒன்றிணைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது.அதுவும் தீபன் தலைமையில்.இதைவிட இன்னும் மேலதிகமாக இரண்டு இடங்களில் பயிற்சிகள் நடைபெற்றது.ஒன்றும் முல்லைத்தீவு அடுத்து முத்தையன்கட்டு பகுதியில்.இதற்குப் பொறுப்பாக தினேஷ் மாஸ்டர் அவர்கள் நியமிக்கப்பட்டார்…
#மிகவும் நீண்ட பதிவாக செல்கிறது.ஆகவே இரண்டு அல்லது மூன்று பதிவுகளாக பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.காரணம் சரியான தெளிவு இன்றைய கூட்டமைப்பின் தொண்டர்களுக்கு கிடைத்தால்தான் சரியான ஒரு அரசியல் பாதையை இனி தெரிவு செய்வார்கள்…
#அதற்காக சில போராட்ட வரலாறுகளையும் போராட்டத்தையும் எழுத வேண்டிய சூழல் ஆனால் இதன் இறுதி முடிவில் கூட்டமைப்பின் அத்தனை போலித் தேசியவாதிகளின் முகங்களும் மக்கள் முன் வைக்கப்படும்..
அன்புடன்
அரசியல் சாணக்கியன்… Manikam Sinnathampy