இலங்கையின் தமிழர்கள்-சிங்களவர்கள் இனப்பிரச்சினை நூறு வருடங்களுக்கு மேலான வரலாற்றை கொண்டது.
இலங்கையின் பூர்வ குடிகளாக தமிழர்கள் இருந்த போதிலும் பீகார் பகுதியிலிருந்து வந்த ஆரிய கலப்பு கூட்டத்தினர் தமிழ்-ஹிந்தி மொழி கலப்பு எழுத்துரு,பேச்சுருவை கொண்ட சிங்கள மொழியை பேசும் கூட்டத்தினர் காலம்போக்கில் இலங்கை தீவில் தமது பெரும்பான்மையை நிரூபித்து அதிகாரத்தை கைப்பற்றி கொண்டனர்.தொடர்ந்த தென்னிந்திய படையெடுப்புகள்,போர் அழிவுகள் அவர்களுக்கு வடக்கு திசையில் வாழ்ந்த தமிழர் மேலான நீண்ட கால காழ்புணர்வுக்கு காரணமாக இருப்பதுடன்,தமது பாதுக்காப்பை உறுதிபடுத்து எந்த எல்லைக்கும் தயங்காமல் செல்ல அவர்களை தூண்டுகின்றது,இன மத ரீதியான அவர்களின் பாதுகாப்புக்கு வடக்கு திசை அச்சுறுத்தலாக இருப்பதாகவே அவர்கள் உணர்கின்றார்கள்,அவர்களின் இந்த வெறுப்பே வட இலங்கை,தென்னிந்தியா என்று தமிழர்கள் மீதான அவர்களின் காழ்புணர்வுக்கு அடிப்படை காரணம்.

இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்த போது தமிழர்களுடன் சேர்ந்து நாட்டை ஆள்வோம் என்ற வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் தமக்கு சார்பான அரச அமைப்பின் மூலம் தமது மொழி,மதத்தை காக்கும் பொருட்டு தமிழர்கள் மீதும் அவர்கள் பூர்வீக நிலங்கள் மீதும் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டனர்.உலக முழுக்க தமிழர்கள் பரவி இருந்தமையும்,சிங்களவர்கள் என்ற ஒரு இனம் இலங்கையை தவிர வேறெங்கும் இல்லை என்றதும் ஒருங்கே இணைந்து அவர்களை பயமுறுத்தியுடன் தம்மை பாதுகாக்க,பலப்படுத்த அவர்கள் தமிழர்களை சகல வழிகளிலும் ஒடுக்க ஆரம்பித்தனர்.

முதலில் இருந்தே தமிழர் தரப்பு தற்காப்பு முறைகளையே கையில் எடுத்து முப்பது வருடங்கள் சிங்கள ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த முற்பட்டாலும்,அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை,மாறாக சிங்கள அரசு தமிழர்கள் மீது ஆயுத பலத்தை பிரயோகித்து அடக்க தொடங்கியது.அகிம்சை வழியில் போராடி தீர்வை காணமுடியாமல் இருந்த தமிழர்கள் மீது பிரயோகிப்பட்ட ஆயுத பலம் அவர்களுக்கு புதிய ஒரு வழியை உருவாக்கவேண்டிய அவசியத்தை பாடங்களாக கற்பித்துகொடுத்தது.

எழுச்சி கொண்ட ஒரு இளைய தலைமுறை ஆயுத வழியை தேர்ந்தெடுத்துகொண்டது.இந்நேரத்தில் இரண்டாம் உலகப்போரில் எழுச்சியடைந்த அமெரிக்க-யூத கூட்டணி,உலகின் உணவு தேவையை அதிகமாக பூர்த்தி செய்யும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தமது வல்லாதிக்கத்தை நிலைநாட்ட இலங்கை திருகோணமலை துறைமுகம் மீது கண் வைத்தது,இது பிராந்திய வல்லரசான அன்றைய இந்தியாவுக்கும்,உலக வல்லரசு பதவியை அமெரிக்காவிடம் இழந்த பிரித்தானியாவுக்கும் கசப்பான அனுபவங்களை வழங்க இவர்களின் கூட்டணியில்,இலங்கையில் இருந்த சிங்கள தமிழர் இனப்பிரச்சினையை சிறுபான்மை தமிழர் தரப்பினுடாக கையில் எடுத்தனர்.
விரக்தியின் விளிம்பில் நின்ற தமிழர் தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிகொண்டு இலங்கை மீதான தமது ஆளுமையை மறுபடியும் நிலைநாட்ட திட்டம் போட்டனர்,தமிழர் தரப்பில் இருந்து முதல்தர முக்கிய ஆயுத குழுவான புலிகள் தவிர மற்றைய அனைத்து இராணுவ குழுக்களும் குறிப்பாக தலைவர்கள் இவர்களின் திட்டத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ பலியாகியிருந்தனர்,இதனை விளங்கி கொண்ட புலிகள் அமைப்பு மற்றைய அனைத்து குழுக்களையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைத்தனர்.

ஏற்கனவே இந்திய-பிரித்தானிய திட்டத்தில் இயங்கிய மற்றைய ஆயுத குழுக்கள் இதற்கு சம்மதிக்காமல் அவர்களின் ஆயுதம் தமிழர்க்கு எதிராக திரும்பும் ஆபத்தை அறிந்து புலிகள் இயக்கம் அவர்களை அழிக்க தயங்கவில்லை,அழிந்தது அழிய வெறுப்பில் சிங்கள தரப்புடன் சேர்ந்தது போக மீதி வெளிநாட்டுக்கு ஓடி தப்பியது.
தமிழர் வரலாறு முழுதும் துரோகம் கூடவே இருந்ததை தெளிவாக புரிந்து இயங்கிய புலிகள் இயக்கம் தமிழர்களுக்குள் இருந்த அகத்தடைகள் முதலில் இனங்கண்டு அழித்த புலிகள் பின்னர் எதிரிகள் பக்கம் திரும்பியது.இப்போது தமிழர்களுக்கு வடக்கில் இந்திய அரச எதிரியும்,தெற்கே சிங்கள அரச எதிரியும் இருந்தது.தலைவர் பிரபாகரன் வழிகாட்டுதலில் புலிகள் இயக்கம் அதிகமாக மக்கள் மயப்படுத்தப்பட்டு வேகமான வளர்ச்சியை கண்டது,சிறுவர் போராளியாகவே தனது வரலாற்று தொடங்கிய பிரபாகரன் சிறுவயதில் இருந்தே இந்திய மெய்யிலை நன்கு கற்று தேர்ந்தவர்.
வீர வரலாறுகள் முதற்கொண்டு அவருக்கு அத்துபடி.சிங்களவர்களின் கொடுமைகளை வயதான பாட்டி சொல்ல கேட்டு வளர்ந்தவர். மாமன்னன் எல்லாளன் சமாதியில் கருவடைந்தவர்.சிறுவயதிலேயே இன்னல்படும் தமிழர்களாக சிந்திக்க தொடங்கிய அவர் கண்டதே புலிகள் இயக்கம்.தனது தாய் மீது மிகுந்த பற்று கொண்டவர் பிரபாகரன்,எனினும் வீட்டை விட்டு காட்டிலயே கடைசிவரை தனது காலத்தை அதிகம் கழித்தார்.இயற்கையை தனது நண்பனாக்கி வரலாற்று வழிகாட்டியாக வரித்து கொண்டு இடைவிடாமல் தமிழருக்கான தனது சுயத்தை வென்று போராடிய ஒரு போராளி
பிரபாகரன் தமிழர்களின் இயல்பான பலவீனத்தை கண்டுகொண்டு அதற்கேற்ப தமிழர் படையை கட்டியெழுப்பியதுடன்,எதிரிகளின் பலத்தை அறிந்து அதற்கேற்ப போராடி தான் இருக்கும்வரை தமிழர்களை தற்காத்து வந்தார்.இந்திய-சிங்கள இராணுவத்தை துவம்சம் செய்த பிரபாகரனின் போரியல் நுட்பங்களின் முன்னால் தாக்குபிடிக்க முடியாமல் அமெரிக்க-இஸ்ரேல் கால்களில் விழுந்த சிங்கள இராணுவத்துக்கு இலவச பயிற்சி கொடுத்து ஆயுதங்களையும் அள்ளி கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பிய அமெரிக்கா,ஆக்கிரமிக்க வந்த அவர்களுக்கு ஆனையிறவில் வைத்து புலிகள் கொடுத்த அடியில் அமெரிக்காவே அலறியதும்,2000 ஆண்டின் முற்பகுதியில் நடந்த இந்த உலகின் மிகப்பெரும் நுணுக்கமான சண்டை புலிகள் மீது உலகிற்கு பயம் கலந்த மரியாதையை பெற்றுகொடுத்தாலும் அதுவே உலக பொம்மை வல்லரசான அமெரிக்காவுக்கு மிகப்பெரும் தலையிடியானது.கூடவே 1999 வான் புலிகள் ஆண்டு என புலிகள் பிரகடனபடுத்தியதும்.
கடற்புலிகளின் மாபெரும் வளர்ச்சியும்,புலிகளின் புலனாய்வுதுறை இலங்கையில் மூலை முடுக்கெல்லாம் தாம் நினைத்த நடத்திய வல்லமைகளும் சேர்ந்து புலிகளின் வளர்ச்சி உலக ஏகாதிபத்தியத்துக்கு புளிப்பை கொடுத்தது.
2000 ஆண்டு தகவல் தொழில்நுட்பம்,மக்கள் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்களும்,விடுதலையை விரும்பி போராடிய மக்கள் கூட்டம்,புதிய உலக ஒழுங்கின் நவீன வாழ்க்கை முறைக்கு அடிமையாகி இருக்க ஆசைகொண்டதும்,புழுதியில் இறங்கி புரட்சி செய்ய இனிவரும் சந்ததிகள் தயாராகவும் இருக்கவில்லை என்ற போதும் புலிகள் இயக்கத்தின் இருப்பு கேள்விக்குள்ளானது.தமிழர் விடுதலைக்காக புலிகள் இயக்கம் முழுமையாக போராடிய பொழுதிலும் தமிழர்கள் முற்றுமுழுதான பங்களிப்பு தமது பங்களிப்பை வழங்கியிருக்கவில்லை.பிரபாகரன் என்ற தனி மனிதனின் மனதில் நடந்த தனது விடுதலைக்கான போராட்டமே பின்னாளில் தமிழர் விடுதலை போராட்டமாக களத்தில் விரிந்து வெற்றிவாகை சூடியது.
மனித ஆன்மாவின் ஆழமான ஆசையாக பிரபாகரனில் பிறந்த விடுதலை வேட்கையில் பெரும்பான்மை தமிழர் விடுதலை குளிர்காய்ந்தனர்,சிறு பகுதியினர் தமது நேரமி பங்களிப்பை வழங்கி புலிகளாயி போராடி மகத்துவமான மாவீரர்கள் ஆனார்கள்.பிரபாகரனின் மான வழியில் விடுதலைக்காக களமாடி வீழ்ந்த வேங்கைகளை காலத்தால் அழியாத மாவீர மதமாக்கி அதை கார்த்திகை மாதமாக்கி அழகு பாத்தார்.இன்று உலக தமிழினமே கார்த்திகையில் ஒன்று கூடி அவர்களிடம் தமது விடுதலை வேட்கையை வேண்டுகின்றனர்.
தொடர்ச்சியான போர்கள்,இருபதுக்கு மேற்பட்ட எதிரி நாடுகள் என்ற போதும் காலமிட்ட வழியில் தமிழர் நிலத்தை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அடையும் வரை போராடுவேன் என கூறி நந்திகடல் நோக்கி விரைந்தது அந்த மகாத்மா,நீண்ட காலத்தில் வீழ்ந்துவிடாத வீரத்தை விழுத்த உள்ளிருந்தே துரோகங்கள் முளைவிட,எங்கே என்று காத்திருந்து எதிரிகள் அதனை பயன்படுத்த,உள்ளே துரோகம்,வெளியே நாற்புறமும் எதிரிகள்,பிரபாகரன் எதற்கும் அஞ்சாமல் ஓய்வில்லா களத்தில் ஓயாத அலையாகி அடித்து ஆடினார்.2000 ஆண்டு புதிய உலக ஒழுங்கு உலக மக்கள் அனைவருக்கும் புதிய கனவுகளை காட்டி அசுர வேகத்தில் அடிமையாக்க தொடங்கியது.புற காரணிகளால் ஏற்படும் அடிமை வாழ்வே விடுதலைக்கு எதிரியாக இருந்த காலம் போய் அக காரணிகளை வைத்து உலக மனிதர்களை அடிமையாக்கும் திட்டம் செயற்படுத்தபட்டது.
விழிப்பே விடுதலைக்கு முதற்படி என்ற பிரபாகரனும் அவர் வழியில் சென்ற ஆயிரமாயிரம் மாவீர புலி வீரர்களும் விடுதலைக்காக போராடியும் அடிமை வாழ்வை இன்னொரு வடிவம் எடுத்து உலகை விழுங்க தொடங்கியது.இதற்குரிய போராட்டத்தை மக்கள் பொறுப்பிலேயே விட்ட பிரபாகரன்,தனது பாதையை செப்பனிடுவதில் கவனத்தை செலுத்தினார்,அது அவருக்கு முன்னால் விடுதலைக்காக போராடி இறந்த மானமாவீரர்கள் சென்ற பாதை,அதுவே அவரின் பாதை,அங்கு வெற்றி அல்லது வீரமரணம் தவிர எதுவுமில்லை,காலமிட்ட கட்டளைப்படி புன்னகைத்தவாறே சென்றார்,தனிமனிதனின் சொந்த விடுதலையை வேண்டிய போராட்டத்தை அவர் தனது சுயத்தை இழுந்து தமிழருக்கு பங்கு தந்திருந்தார்.
தமிழர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னால் அதை சரிவர பின்பற்றாமல் பாதை மாறி விடுதலையை தவறவிட்டனர்,”ஒரு உயிர் உன்னதமானது என்பதை அறிவேன்.ஆனால் உரிமை அதைவிட உன்னதமானது ” என்று கூறிய பிரபாகரனுடன் சென்று கொண்டிருந்த மக்கள் மீது சொல்லொனா அழிவுகளை ஏற்படுத்தி அவர்களை அந்த விடுதலை பாதையிலிருந்தும் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர் எதிரிகள்,தமிழருக்கு தருவதற்கு தன்னிடத்தில் எதுவும் இல்லை,தான் போகும் இந்த பாதையில்தான் தமிழருக்கு மட்டுமல்ல உலகம் முழுதும் ஆழமாக சுதந்திரத்தை வேண்டும் அனைவருக்குமான விடுதலை இருக்கின்றது என்றபடி அவர் நடந்தார்.உண்மையில் விடுதலை தேவைப்பட்ட சிலர் சென்றார்கள்,பலர் பாதை மாறினார்கள்,இடையில் சிலர் திரும்பினர்,ஆனாலும் உலகின் பல்வேறு காலகட்டத்திலும் சுதந்திர புருசர்கள் சென்று விடுதலை அடைந்த அந்த பாதை தனக்கானவனை எதிர்பாத்து காத்திருக்கின்றது…
“அவர்கள் கால நதியில் கடவுளாய் பிறப்பர்”