வாய்ப்புக்களை வீணடித்த கூட்டமைப்பை முற்றாக நிராகரியுங்கள் – கவிஞர் தாமரை

352

கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ வாய்ப்புகளை வழங்கியாயிற்று இவர்களுக்கும் இவர்கள் சார்ந்த தமிழ்க் கூட்டமைப்புக்கும்.உருப்படியாக ஒன்றைக் கூட சாதிக்காததோடு அல்லாமல், இன அழிப்பு என்பதைக்கூட போர்க் குற்றமாகக் குறைக்க முயன்ற புண்ணியவான் இந்த சுமந்திரன்…

ஒழுங்காக ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க வைக்கத் துப்பில்லை, மீண்டும் தேர்தலுக்கு எந்த முகத்தைக் கொண்டு வருகிறார்கள் வாக்குக் கேட்டு ??? .சிங்களரைக் கூட நம்பி விடலாம், இந்தத் தமிழ்த் துரோகிகளை நம்பக் கூடாது.

தமிழ் மக்கள் புதிய தளத்தை நோக்கி நகர ஆரம்பிக்க வேண்டும். போதும் மக்களே நம்பி ஏமாந்தது !. இவர்கள் தோற்பதால் நமக்குப் புதிய நட்டம் எதுவுமில்லையல்லவா ??? ஆனால் அடைவதற்கு ஏதேனும் புதிய இலாபம் இருக்கக் கூடும்.

தேர்தலில் இவர்கள் கட்சிக்கு மரண அடி விழுந்தால், தமிழ் மக்களிடையே புதிய அலை ஏற்படும் !. புதிய நிலை ஏற்படும் !.”

Sivavathani P