ஈழத்தில் முள்ளிவாய்க்கால்,லட்சம் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்பட்டார்கள்.இந்திய – சிறிலங்கா கூட்டு சதியில்,பன்னாட்டு ஆயுத உதவியுடன் கதற கதற குழந்தைகள் பெண்கள் சிறுவர்கள என கேட்க ஒரு நாதியற்று கொல்லப்பட்டனர்.பூர்வீகமாக அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூமியில் வெள்ளையர் விட்டு சென்ற பின்னர் பின்கதவால் அதிகாரத்தை கைப்பற்றி கொண்ட இனவாத சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழர்கள் 30 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடிய பொழுதும் சிங்கள அரசு அவர்களுக்கு வன்முறையை பரிசாக கொடுத்தது.பொறுத்து பொறுத்து பார்த்த தமிழர்கள் பொங்கியெழுந்தனர்.ஆயுத போராட்டத்தை வரலாறு தமிழர்கள் கையில் வலிந்து திணித்தது.ஆயிரம் அடிமைகளில் ஒருவனாக பிரபாகரன் எழுந்து நடந்தான்,பின்னால் பல்லாயிரம் வீரர்கள் திரண்டு செங்களம் ஆடினர்.சிங்களம் பதைபதைத்து போனது.இந்தியா துடிதுடித்தது.உலகை மொத்தமாக திரட்டி வந்து உரிமைக்கான முப்பது வருட ஆயுத போரை முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தது.
உயிர் உன்னதமானது என்பது உண்மைதான்,ஆனால் அதை விட உன்னதமானது உரிமைகள் என்று போராடிய தியாக வீரர்களின் மண் இது,அவர்களின் இனம் நாம்,ஆறாத காயங்கள்தான்,ஆனால் அடுத்து என்ன? காயத்திற்கு மருந்து தீர்வுதான்.தீர்வை நாம் தள்ளி தள்ளி தவிர்க்கும் போது,காயங்கள் இன்னும் பெரிதாகவே வாய்ப்புள்ளதுடன்,நமக்கான தீர்வுகளும் நம்மை தாண்டி செல்லும் வாய்ப்புக்களே அதிகம்.ஆகவே உலக தமிழர்களே சிந்தியுங்கள்.இத்தகைய பெரும் தியாகங்களுக்கு பதில் எம்மில் நாமே தேடி எடுக்க வேண்டும்.ஆதிகாலத்தில் இருந்தே விடுதலையே மனிதர்களின் தணியாத தாகமாக இருந்து வருகின்றது.இத்தகைய எம்மின விடுதலை போராட்டத்தில் இருந்தே நாம் இவற்றை தேடி தேடி பருகுதல் வேண்டும்.வரலாற்றை வழிகாட்டியாக கொண்டு நாம் எமது சொந்த பலத்தில் எம் இனத்தை இறையாண்மை கொண்ட ஒரு தேசமாக,சிங்கள,இந்திய எதேச்சதிகார ஊழல்படிந்த கூன் விழுந்த அமைப்புகளில் இருந்து விடுதலை பெறுதல் வேண்டும்.நம்மை தொடர்ந்து மயக்கத்தில் வைத்திருக்கும் திரைபடங்கள்,சினிமா,கிரிக்கெட் போன்ற அனைத்துவித மோகங்களில் இருந்தும் வெளிவந்து எங்களால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு எம் இனத்துக்காக சிந்திக்க வேண்டும்,எம்மின வரலாறுகளை சரியாக தேடி தேடி அறிந்து நாம் எமக்குள் ஒன்றிணைந்து கொள்ளுதல் வேண்டும்,எமக்கு வேண்டும் விடுதலை,உலகின் ஆதி இனம்,நமக்கு விடுதலை இல்லையேல்,யகத்தினை எரித்திடுவோம்
தமிழரின் தாகம் தணியாத தமிழீழ தாயகம்