தன் மகனை காண ஏங்கும் ஒரு தந்தையின் தவிப்பு

171

இந்த முதியவரின் புகைப்படம் பகிரப்படுவதால் அதனை எடுத்தவன் என்ற ரீதியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட அந்தத்தருணத்தை பகிர்கிறேன் .

இந்த முதியவர் ஏதோ ஒரு இறுதி நம்பிக்கையில் சலசலப்புகளில் இருந்து விலகி ஓரமாக தன் மகனின் படத்துடன் வந்தார் ஐயா !ஐயா !
என்னத்தில வந்தனீங்க ?மோட்டச்சைக்கிலில இருந்து வரப்போறியலே ?

“இல்லை ராசா”
நான் வானில வந்தனான் மனம் சரியில்லை நடக்கிறன் .
பின்னால வாகனத்தில ஏறுவன்” .சரிஐயா கவனம்!

அவர் இல்லை ராசா என்று சொன்ன பொழுது புல் அரித்தது
மகன் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறான்
அவனை அரவணைக்க ராசா என சொல்லி அழைக்க அந்த மனம் ஏங்கி ஏங்கி ஏமாற்றமடைந்திருக்கிறது.

அவருக்கு இந்த பெரிய கூட்டம்
எல்லாம் பெரிதா தெரியவில்லை,
அமளிதுமளிகளும் தெரியாது,
ஏதோ ஒரு நம்பிக்கையில் அமைதியாகநகர்கிறார்….

_chunnakam santhru
09.02.2021