தன்னிடம் கல்வி பயின்ற மாணவனுக்காக கணவனையே விட்டுச் சென்ற பெண், தனிமையில் இறந்த கணவன்..

121

அதற்குப்பின் தனிமையிலேயே வாழ்ந்த அந்த கணவர், தனிமையிலேயே உயிரிழந்த செய்தி ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் தெரியவந்துள்ளது.

அந்த மாணவர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன். மக்ரோனுக்கு 15 வயது இருக்கும்போது தனது ஆசிரியையான பிரிஜிட்டுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது,

பிரிஜிட்டுக்கு அப்போது வயது 40, 1974ஆம் ஆண்டு André-Louis Auzière என்பவரை திருமணம் செய்துகொண்டு, அவருக்கு டிபைன், செபாஸ்டியன் மற்றும் லாரன்ஸ் என்னும் மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகு மக்ரோனுடன் பழக்கம் ஏற்பட்டதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட, கணவனை பிரிந்து மக்ரோன் வாழ்ந்த பாரீஸுக்கே வந்துவிட்டாராம் பிரிஜிட்.

அப்போதிலிருந்தே தனிமரமாகிவிட்ட ஆண்ட்ரே, மரணம் வரை தனிமையாகத்தான் இருந்திருக்கிறார். 1951 இல் பிறந்த André-Louis Auzière கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 69ஆவது வயதில் உயிரிழந்த செய்தியே இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது.

டிசம்பர் 24, 2019 அன்று George Pompidou de Paris மருத்துவமனையில் காலமானார்

முன்னாள் கணவர் இறுதிச்சடங்கிற்கு பிரிஜிட்டும் அவரது இந்நாள் கணவரான மக்ரோனும் சென்றார்களா என்பது குறித்த தகவல்களும் இல்லை.

அப்பா எப்போதுமே தனிமையாகவே இருக்க விரும்பினார், அவர் ஆசைப்பட்டது போலவே, ரகசியமாகவே, தனிமையாகவே அவரை டிசம்பர் 24 அன்று அடக்கம் செய்துவிட்டேன் என்கிறார் சட்டத்தரணியான அவரது மகள் டிபைன் (Tiphaine Auzière 36).

2007இல் திருமணம் செய்துகொண்ட மக்ரோனுக்கும் பிரிஜிட்டுக்கும் குழந்தைகள் இல்லை, ஆனால், பிரிஜிட்டுக்கும் ஆண்ட்ரேக்கும் பிறந்த பிள்ளைகள் இப்போது மக்ரோனை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆண்ட்ரேயோ தனிமையாகவே வாழ்ந்து தனிமையாகவே மரணமடைந்திருக்கிறார்.