வெடிதரன் போடும் கொத்துகுண்டுகள்…

97

அண்மையில் வடமராட்சியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சிறிதரன்.தான் பிரபாகரன் என்றால் சுமந்திரன் அன்ரன் பாலசிங்கம் மாதிரி என்று கூறியுள்ளார்.அத்துடன் நீலன் திருச்செல்வம் இருந்திருந்தால் இடைக்கால அதிகார சபைக்கான யோசனையை தயாரித்திருப்பார் என தலைவர் பிரபாகரன் தளபதிகள் மத்தியில் கூறியதாக அடித்து விட்ட சிறிதரன்.அத்துடன் சிறிலங்கா அரசு உலக கிண்ணத்தை பெற்ற போது அதை தலைவர் பிரபாகரன் கொண்டாடினார் என்றொரு கதையை அவிழ்த்து விட்ட சிறிதரன் . கடுமையாக போர் நடந்த 1996 இல் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்ட சமயத்த்தில் சிறிலங்கா கிண்ணத்தை வென்றது. அதனையும் இன அழிப்புக்கும் போருக்குமான பிரசாரமாக அன்றைய அரசு பயன்படுத்தியது. இந்தக் காலத்தில் தலைவர் அந்த வெற்றியை கொண்டாடினார் என்பது எப்படியான பொய்யாக இருக்கும்? அப்படியொரு சமயத்தில் தலைவர் வெற்றியை கொண்டாடினார் எனப் பொய்யுரைத்து தலைவரை மோசமாக சித்தரித்து பார்க்கும் கபட நோக்கங்கள் தமிழர்களிக்கு புரியாமல் இல்லை.

மேற்குறித்த விடயங்கள் பொய்யாக மாத்திரமின்றி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பாரதூரமான அளவுக்கு இழிவுபடுத்தும் இழி செயல்களாகவும் அமைந்துள்ளன. இதனை சிறிதரன் நன்கு திட்டமிட்டு செய்வதாகவே தெரிகின்றது. சுமந்திரன் தெற்கில் சிங்கள ஊடகங்களில் பேசி போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் தலைவரையும் கொச்சைப்படுத்த சிறிதரன் வடக்கில், பொய்களைகூறி, வரலாற்றை திரிவுபடுத்தி ஆதாரமற்ற அரசியலை செய்து சுமந்திரனின் வேலையை இங்கு செய்கிறார்.இதுவே இவர்களின் நிகழ்ச்சி நிரல்.

எதையும் செய்துவிட்டு தலைவர் பிரபாகரன் பெயர் சொல்லி தப்பி, முன்னாள் போராளிகளை கூலிக்கு பயன்படுத்தி ,பிரதேசவாதம் போன்றவற்றை பேசுபொருளாக்கி வாயில் வருவதை அடித்து விட்டு வாக்குகளை அள்ளலாம் என் உங்கள் கனவு பொய்க்கத் தொடங்கிவிட்டது.நீங்கள் எவ்வளவுக்கு இந்த மண்ணையும் போராட்டத்தையும் பற்றி பிரக்ஞை இன்றி,அல்லது வேண்டுமென்றே தவிர்க்கும் போக்கு,புலி எதிர்ப்பு வாக்குகளில் வெல்லும் சுமந்திரன் கூட்டு என்பன உங்களை படுகுழியில் தள்ளியே தீரும்,வரலாறு மேலும் ஒரு துரோகியை எங்களுக்கு அடையாளப்படுத்தி கொடுத்துள்ளது.உங்களினதும் உங்கள் கூட்டத்தின் கணக்கும் முடியும் ஒரு நாளில், இதுவரை உங்களை ஆதரித்த ஊடங்களும் ஆதரித்த உங்கள் கட்சி ஆதரவாளர்கள் உங்கள் உண்மை முகம் கண்டு கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார்கள். உங்கள் அயோக்கியத்தனமான அரசியலுக்கு இந்த முறை தேர்தலில் எம் மக்கள் விழிப்புடன் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.

நன்றி – பொன் அம்பலத்தார்