ஆக தலைவன் பிரபாகரனை இழிவுபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கம் அப்பட்டமாக தெரிகிறது.
‘வரனெ ஆவிஷியமுண்டு’ மலையாள படத்தில் தேசிய தலைவரை இழிவுபடுத்தும் காட்சி, திட்டமிட்ட அவதூறா? அல்லது எதேச்சையாக நிகழ்ந்த கைப்பிழையா? என்று ஒரு விவாதம் 2 நாட்களாக நடந்தது.. பின் துல்ஹரின் மன்னிப்பு பேட்டியுடன் அதுவும் பிசுபிசுக்க தொடங்கிவிட்டது..
ஆனால் இந்த நிந்தனை உள்நோக்கம் கொண்டது என்பதையும் இதன் சூத்திரதாரி யார் என்பதையும் எவரும் இதுவரை அடையாளம் காணவில்லை.. மேம்போக்காக மம்மூட்டி மகன் துல்ஹர், சதயன் அந்திகாடு மகன் அனூப் போன்ற அம்புகள் மீது மட்டுமே விரல்கள் நீண்டிருந்தன…
நேற்று இந்த திரைப்படத்தை பார்த்தேன்.. அந்த படத்தில் நாய் ஒன்றை தலைவர் பிரபாகரன் பெயர் சொல்லி அழைக்கும் காட்சி வலிந்து திணிக்கப்பட்டிருந்தது.. அந்த காட்சிகளில் வரும் ‘சங்கி’ சுரேஷ்கோபி, Ex.மேஜர் கேரக்டரில் நடித்திருந்தான்.. அவனது நண்பனாக (மற்றொரு மேஜராக) நடித்திருந்தவன் ஒரிஜினல் Ex.மேஜரான ‘மேஜர்’ ரவி.. இலங்கைக்கு சென்றிருந்த அமைதிப்படையில் அங்கமாக இருந்தவன்..
இவன்தான் 2007-ல் #மம்மூட்டியை வைத்து ‘மிஷன் 90 டேஸ்’ என்கிற ராஜிவ் படுகொலையை மையமாக கொண்ட படம் எடுத்தவன்.. மம்மூட்டி இந்தப்படத்தில் தமிழின போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக வசனமும் அமைத்திருப்பான்..
பிரபாகரன் அவர்கள் படுகொலை, அறிவிக்கப்பட்ட அன்று கேரள காட்சி ஊடகங்களில் எல்லாம் இவன் (மேஜர் இரவி) தோன்றி ஈழப்போராட்டத்துக்கு எதிராகவும் பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் அந்த நாள் முழுவதும் பேசிக்கொண்டிருந்தான்..
‘வரனெ ஆவிஷியமுண்டு’ படத்தில் வரும் நாய் காட்சி இவனை மையமாக வைத்தே வருகிறது என்பது குறிப்பிட்டதக்கது.
– தாய்மடி முருகானந்தம்