கழட்டி விட்ட தொலைபேசி காதலன்,தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்த யுவதி

117

யாழில் சம்பவம் ; காதல் தோல்வியால் தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்ட 23 வயது இளம் யுவதி!

தொலைபேசியில் உண்டான காதல்,இளைஞர் கழட்டி விட்டதால்,காதல் தோல்வியில் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தொலைபேசி கண்டுபிடித்த அன்றே இவ்வாறான மரணங்களுக்கும் திகதி எழுதப்பட்டிருக்கும்.திருவிழாக்கள்,வீதிகள் என்று கண்ணால் தூது விட்டு காதலித்த தலைமுறைகளில் காதலும் சரி,காதலர்களும் சரி பிரிந்தது இறந்தது மிக குறைவு,ஆனால் இன்று எல்லாமே கையடக்கத்தில் கிடைக்கின்றது என்ற மாயையில் சிக்குபவர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.இவற்றினால் தோல்விகள் மனவிரக்திக்கான நிறைய ஏற்படுவதற்கான வழிகள் இருப்பது போலவே,அவற்றில் இருந்து வெளியே வருவதற்கான வழிகளும் காணப்படும்.தேவையானவர்கள் அவற்றை கண்டுகொள்கின்றனர்.அவசரபடுகின்றவர்கள் போய் சேர்க்கின்றனர்.ஆத்ம சாந்திகள்.