தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி

123

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள் சுடர் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஏற்றப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழ் இனப்படுகொலைகள் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று குறித்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இருப்பினும் இன்று நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் நடமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனின் வீட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள் நினைவு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறிலங்கா அரசின் அத்தனை இராணுவ காவல்துறை மற்றும் கொரானா கெடுபிடிக்குள்ளும் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஏழு நாட்கள் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.புலம்பெயர் தமிழர்கள் இவற்றை கருத்தில் கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளை ( மே-18 ) ஒற்றுமையாக,பங்கு சண்டைகள் தவிர்த்து போட்டிகள் பொறாமைகள் தவிர்த்து கடைபிடிக்க வேண்டுகிறோம்.