இலங்கையின் அதிகாரத்தை தங்களுக்கு இடையே பகிர்ந்து கொண்டு இருக்கும் ராஜபக்சே சகோதரர்கள் சிவில் நிருவாகத்தை தங்களுக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகள் மூலம் நிரப்பி வருகிறார்கள் . ஊழல் , போர்க்குற்றம் (1989,2009) உட்பட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இந்த இராணுவ அதிகாரிகள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு அதிகாரமிக்க பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
1: மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் / பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
2: லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா: உறுப்பினர், பொருளாதர புத்தெழுச்சி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி
3: மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெல: பிரதானி, ஜனாதிபதி செயலகம்
4: மேஜர் ஜெனரல் கருணாரத்ன எகோடவேலா : தலைவர், COVID19 Healthcare and Social Security நிதியம்
5: அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ்: மேலதிக செயலாளர் , ஜனாதிபதி செயலகம்
6: மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க: தலைவர், துறைமுக அதிகாரசபை
7: மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராட்ச்சி : பணிப்பாளர் நாயகம் , பல்நோக்கு அபிவிருத்தி செயலணி
8: மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா: தலைவர், வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு செயலணி
9: மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்: தலைவர், தேசிய புலனாய்வு பணியகம்
10: மேஜர் ஜெனரல் விஜிதா ரவிப்ரியா: பணிப்பாளர் , சுங்க திணைக்களம்
- மேஜர் ஜெனரல் தர்ஷனா ஹெட்டியாராச்சி: தலைவர், இலங்கை புனர்வாழ்வு ஆணைக்குழு
- யாப்பா சேனாதிபதி: ஜனாதிபதி செயலகம்
- மேஜர் ஜெனரல் G.A. சந்திரசிறி : தலைவர், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை
- பிரிகேடியர் துவான் சுரேஷ் சல்லே: தலைவர், இலங்கை புலனாய்வு நிறுவனம்
- ஏஎஸ்பி பிரசன்னா டி அல்விஸ்: பணிப்பாளர் , தீவிரவாத விசாரணை பணியகம்
- மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக: தலைவர், நுகர்வோர் அதிகார சபை
- சீ.டீ. விக்ரமரத்ன : உறுப்பினர், பொருளாதர புத்தெழுச்சி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி
- ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ்: உறுப்பினர், பொருளாதர புத்தெழுச்சி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி
- மேஜர் ஜெனரல் சுதன்த ரணசிங்க: உறுப்பினர், பொருளாதர புத்தெழுச்சி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி
- ஏர் மார்ஷல் ரொஷான் குணதிலக : ஆளுநர் , மேல் மாகாணம்
– Shaila