ஒரு நாடு இரு தேசங்கள்!

தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின்“தேர்தல் அறிக்கை” வெளியீடும், பிரசாரக் கூட்டமும் நடைபெற்றிருந்தது.

அங்கு வெளியிடப்பட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது!

தமிழ்மக்களது அரசியல் பெருவெளியில் “ஒரு நாடு இரு தேசங்கள்” என்கின்ற கருத்தியல் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இலங்கைத்தீவில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டு தொடக்கம் நேரடியாக அடக்குமுறைகள் நடைபெற்றுவந்தன. தனிச்சிங்கள சட்டம் என்றும் கல்வித்தரப்படுத்தல் என்றும் சட்டரீதியான அடக்குமுறைகள் ஊடாக தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும் உருவாகி மக்கள் உயிர் இழக்கின்ற நிலை ஏற்பட்டது. அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளும் அடக்குமுறை கொண்டு ஒடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து தனிநாட்டுக்கான பிரகடனமாக கருதப்படுகின்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஆயுதவழியிலான விடுதலைப் போராட்டம் நடைபெற்று அதன் முடிவில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களையும் 50000 இற்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்திருக்கின்றோம்.

இத்தனை இழப்புகளின் இறுதியில் தமிழ் மக்களிற்கான உரிமைப் போராட்டம் இன்னமும் தொடர்கின்றது.
அரசியல் வழிமுறைகள் ஊடாக அதற்கான வழிகளில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இதில் ஏக்கிய இராச்சிய என்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் வழியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் “அர்த்தமுள்ள அரசியல் பரவலாக்கம்” என்ற நிலைப்பாட்டிற்கு மாற்று நிலைப்பாடாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் “ஒரு நாடு இரு தேசங்கள்” என்பதனை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.

இலங்கைத்தீவில் எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டுமானால் அவர்கள் வாழ்ந்துவரும் தேசம் என்ற எண்ணக்கரு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
இந்நிலையில் உங்களிடம் இயல்பான கேள்வி ஒன்று எழலாம். தேசம் என்பதையும் நாடு என்பதையும் ஒரே அர்த்தத்துடன் அன்றாடம் பயன்படுத்தி வரும் நிலையில் இவை இரண்டிற்குமிடையிலான கருத்துநிலை வேறுபாடு என்ன? என்பதே அதுவாகும். தேசம் என்ற வார்த்தையும் நாடு என்கின்ற வார்த்தையும் மாறிமாறி பயன்படுத்தி வந்தாலும் இவை இரண்டிற்கும் இடையில் கருத்தியல் வேறுபாடு உள்ளது. ஒருநாடு என்பது சர்வதேச எல்லைகளைக்கொண்ட சட்டரீதியான ஓர் புவியியல் நிலப்பரப்பு எனலாம். இவை மற்றைய நாடுகளுடனான சர்வதேச உறவுகளையும் ஏற்றுமதி இறக்குமதிகளைக் கொண்ட சர்வதேச வர்த்தகங்களையும் கொண்டிருக்கும் சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற ஒன்றாகும். உலகில் ஏறத்தாழ 190 நாடுகள் காணப்படுகின்றன.

தேசம் என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் காணப்பட்டாலும் கூட பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணத்தின்படி ஒரு இனம் தனக்கென தனியான மொழிஇ கலாச்சாரம்இ பண்பாடுஇ பாரம்பரியம் மற்றும் வேறுபடுத்திக்காட்டக்கூடிய தனியான வரலாறு என்பவற்றைக் கொண்டிருப்பதுடன் குறித்த ஓர் நிலப்பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவார்கள் ஆயின் அவர்களை தேசம் (Nation) என அங்கீகரிக்க முடியும். இங்குள்ள மயக்க நிலை என்னவென்றால் “தேசம்” (Nation) என்பதை தனிநாடு என பலர் தவறாக அர்த்தப்படுத்திக்கொள்வதுண்டுஇ தேசம் என்பது தனிநாடல்ல. தேசம் என்பது மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்ட ஓர் தேசிய இனத்திற்கான அரசியல் அங்கீகாரம் மட்டுமே.

தேசம் என்கின்ற அரசியல் அங்கீகாரத்துக்கான முக்கியத்துவம் என்ன? ஏன் இந்த அரசியல் அங்கீகாரம் வேண்டும்? எனக் கேட்டால் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்ட இனம் தனது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளை முன்வைக்க முடியும். ஆக தமிழர்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தமிழ் மக்கள் ஓர் தேசமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.

அவ்வாறான அங்கீகாரம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுத்தருவதற்கான அடிப்படையாக அமையும். மாறாக இலங்கை என்கின்ற ஓர் நாட்டுக்குள் தமிழ் மக்கள் வெறும் சிறுபான்மையினர் மாத்திரமே என்பதை ஏற்றுக்கொண்டு 13வது திருத்தச்சட்டம் போன்றதோர் அதிகாரப்பரவலாக்கத்தைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் தமிழர்களுக்கு தேசம் என்கின்ற அங்கீகாரம் தேவையில்லை. “அர்த்தம் உள்ள அதிகாரப் பரவலாக்கம்” என்கின்ற நிலைப்பாடே போதுமானதாகும்.

இதில் உள்ள முக்கிய விடயங்கள் எவையாக இருக்கலாம்.

  • தமிழர் தேசத்தில் மேற்கொள்ளப்படும் நிர்வாகம் அனைத்தும் தமிழர் தேசத்தின் நிர்வாக தலைமையில் நடைபெறவேண்டும்.
  • கனடாவில் கியுபா உள்ளது போலஇ பிரித்தானியாவில் வட அயர்லாந்துஇ ஸ்கொட்லாந்து உள்ளது போல தனியான நிர்வாக அலகாக தமிழர் தேசம் இருக்கவேண்டும்.
  • சிங்கள தேசத்தின் இருப்பையும் அதன் வரலாற்றையும் ஏற்றுக்கொள்வதுபோல தமிழர் தேசத்தின் இருப்பையும் வரலாற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்
  • தமிழர் நிலங்கள், தமிழர் கலைஇ தமிழர் பண்பாடுஇ தமிழர் பொருளாதாரம்இ தமிழர் கல்வி பாதுகாக்கப்படவேண்டுமானால் தமிழர் தேசத்திற்கான அங்கீகாரம் வழங்கப்படவேண்டும்.

தமிழர்களது இருப்பும் பாதுகாப்பும் பாதிக்கப்படும் இடத்து சர்வசன வாக்கெடுப்பு நடத்தி தமது தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் இறைமையும் கொண்டவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

தமிழர்கள் தொடர்ச்சியாக பேரினவாத அரசுகளால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுவருவதை கவனத்திற்கொண்டும் பெருமளவான மக்களை இழந்த நிலையிலும் தமிழர்களுக்கான பாதுகாப்பான நீடித்து நிற்ககின்ற தீர்வை தேடுவது தமிழர்கள் அனைவரதும் கடமையாகும்.

என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.