அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று முடிந்த நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன. உலகின் அதிகாரம் படைத்த பதவியாக அமெரிக்க ஜனாதிபதி பதவி கருதப்படுகின்றது. இந்நிலையில், அனல் பறந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் தற்போது முடிவு கட்டத்தை நெருங்கியுள்ளது. குடியரசு கட்சியின் சார்பில் சமகால ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனா ஆகியோரும் போட்டியிட்டனர்.
துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்குப் பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மோசடி நிகழ்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உள்ளதாக அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இச் செயற்பாடானது ஸ்ரீலங்கா அரசியல்வாதியான சுமந்திரனின் தேர்தல் வெற்றியை போன்ற ஒரு கபட நாடகம் போல் தோன்றுகின்றது.
- மதிப்பிற்குரிய ஜோன் பென்றோஸ் உடனான இராஜதந்திர சந்திப்பு
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளில் பிரித்தானியாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு
- பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.
- கீதா மோகனின் கவிதை தொகுப்பு யுகபாரதி அவா்களின் அணிந்துரை
- செஸ் உலகக் கோப்பை தொடரில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா #Praggnanandhaa