இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

86

திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது காந்தி தேசத்தின் (இந்திய)தூதரான டிக்சித் அவர்கள் “திலீபன் ஒரு பயங்கரவாத புலி இயக்க உறுப்பினர். எனவே அவரின் உயிர் போவது பற்றி இந்திய அரசுக்கு கவலை இல்லை” என்று திமிராக பதில் கூறினார்.

இன்று தீட்சித் யார் என்றோ அல்லது அவர் எங்கே என்றோ யாருக்கும் தெரியாது. ஆனால் திலீபன் இந்தியாவில் தூத்துக்குடியில் பெட்டிக்கடைவரை வந்துவிட்டார்.

எந்த திலீபனை பயங்கரவாதி என்று இந்திய அரசு கொன்றதோ இன்று அந்த திலீபன்; தமிழ்நாட்டில் பல வடிவங்களில் திகழ்கிறார்.

தூத்துக்குடியில் பெட்டிக்கடையின் பெயராக, மதுரையில் ஒரு வீதியின் பெயராக, தஞ்சாவூரில் ஒரு பேருந்து தரிப்பிட நிழற்குடையாக, பிறக்கும் பல குழந்தைகளின் பெயராக தமிழ்நாடு எங்கும் திலீபன் இருக்கிறார்.

ராஜிவ்காந்தி கொலைக்கு பின் தமிழ்நாட்டில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என பார்ப்பணிய ஊடகங்கள் கூறி வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி என்று பெயர் வைப்பதைவிட திலீபன் என்ற பெயரே அதிகமாக ஏன் வைக்கப்படுகிறது என்பதை இவர்கள் கூறுவதில்லை.

இதில் இருந்து என்ன தெரிகிறது?

நாம் திலீபனை. அறுவடை செய்கிறோம். ஏனெனில் நாம் விதைத்தது திலீபனையே யொழிய தீட்சித்தை அல்ல.

இனி இவ்வாறு பல அறுவடைகளை நாம் பெறப்போகிறோம்!

நன்றி – தோழர் பாலன்