திலீபன் கொலைகாரன் என கூறும் மிக மோசமான கொலைகாரன் டக்ளஸ் !

87

யார் இந்த திலீபன்? இவன் சாதித்தது என்ன? தமிழ் மக்களுக்கு இவன் எவற்றைக் கொடுத்து விட்டான் என டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியலுக்காக திலீபனை எல்லாம் தியாகிகள் ஆக்கிக் கொள்ள நினைக்கின்றார்கள்.

திலீபன் ஏன் கொல்லப்பட்டான். அவனது சுயரூபம் என்ன, எத்தனை பேரை அவன் கொன்றான் என்பதெல்லாம் தெரியாது பேசக்கூடாது.

சகோதர படுகொலைகளில் ஈடுபட்டவன், இலங்கை அரசாங்கம் கொன்று குவித்ததை விடவும் இவர்கள் செய்த கொலைகள் ஏராளம்.

இவ்வாறான நபர்களை எதற்காக நினைவுகூர வேண்டும். இதில் அவருக்கு தியாகி பட்டம் வேறு.

நடந்து முடிந்த விடயங்களை விடுவோம், ஆனால் புலிகளில் எவரும் தியாகம் செய்யவில்லை. “கந்தன் கருணையில்” கொல்லப்பட்ட தமிழர்களுடன் திலீபனுக்கு தொடர்பு இல்லையா?

இந்தக் கொலைகளின் பின்னணியில் இருந்தவர்களுக்கு தியாகி பட்டம் கொடுக்க வேண்டுமா?

நடைபெற்று முடிந்த யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டனர். அவர்களையும் சேர்த்து பொதுவான நினைவுத் தூபி அமைத்து அனுஸ்ஷ்டிக்க வேண்டும்.

அதை விடுத்து தனித்தனி நபர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதெல்லாம் அரசியல் ஏமாற்று வேலை. முள்ளிவாய்க்கால் சென்று நினவேந்தல் நடத்த விக்னேஸ்வரனுக்கு என்ன தகுதி இருக்கின்றது? யுத்தம் முடியும் வரையில் ஒரு வார்த்தையேனும் பேசாதவர்.

தமிழர்கள் குறித்து கவலைப்படாது இருந்தவர் இன்று வீர வசனங்களை பேசிக்கொண்டு திரிகிறார்.

அப்போது பேசியிருந்தால் அவரது நீதியரசர் பதவி பறிக்கப்பட்டிருக்கும். அரச சம்பளம் பறிபோயிருக்கும். சுகபோக வாழ்க்கையும் ஆடம்பர வாழ்க்கையும் பறிபோயிருக்கும்.

இன்று அரசியலில் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள மக்களை குழப்பி வருகின்றனர். இவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் என கூறவே தகுதியற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.