திருமதி அம்பிகை செல்வக்குமார் மாபெரும் வெற்றியுடன் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3.00 -5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துக்கொள்ள உள்ளார்.
இது நீண்டதொரு தமிழின போராட்ட வரலாற்றி அகிம்சைவழி மாபெரும் வெற்றியாகும். ஓட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் அம்பிகை முன்னெடுத்த அறப்போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றுமாறு நேற்று பிரித்தானியாவில் மாபெரும் பேரணியை நிகழ்த்திய புலம்பெயர் தமிழர்களுக்கும் உலகெங்கும் அவருக்காக குரல் கொடுத்த தமிழினத்தின் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகின்றது.
நிகழ்வினை இயன்ற மாலை இலண்டன் நேரம் 3.00 -5.00 மணிவரை நேரலையாக பின்வரும் இணைப்பில் மெய்நிகர் வழியாக உலெகெங்கும் உள்ள அனைவரும் பார்வையிட்டு அம்பிகைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கமுடியும்.
https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09மும்மத தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள குறித்த மெய்நிகர் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பன்னாட்டு அரசியல் பிரமுகர்களின் சிறப்புரைகளும் அம்பிகை செல்வக்குமாரின் வெற்றியுரையம் இடம்பெறவுள்ளது.