யாழ் .போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏழாம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்குக் கொரோனா தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அண்மையில் வீடு திரும்பிய அவர், கடமைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார் .

இந்த நிலையில் அவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7வது நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குச் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முதல் இரண்டு தடவைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் மூன்றாவது பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.